ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை: தலமும் கோவிலும்

(ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை): மாடமும் மயானமும்   தொடர்ச்சி) ஊரும் பேரும் 45 தலமும் கோவிலும் கருவூர்-ஆனிலை     பழங் காலத்தில் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கிய நகரங்களுள் ஒன்று கருவூர் ஆகும். அதன் பெருமையைச் சங்க நூல்களும் சமய நூல்களும் எடுத்துரைக்கின்றன. “திருமா வியனகர்க் கருவூர்” என்று அகநானூறும், “தொன் னெடுங் கருவூர்” என்று திருத்தொண்டர் புராணமும் கூறுதலால் அதன் செழுமையும் பழமையும் நன்கு புலனாகும். ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி யாற்றின் வடகரையில் அமைந்த கருவூர் பண்டைச் சோழ மன்னர் முடி…

ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை) : மாடமும் மயானமும்

(ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 44 மாடமும் மயானமும்     மாடம் என்னும் பெயர் அமைந்த இரண்டு திருக்கோயில்கள் தேவாரத்திற் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கடந்தையென்னும் பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம்,       “கடந்தைத் தடங் கோயில் சேர்       தூங்கானை மாடம் தொழுமின்கனே” என்று தேவாரம் அம் மாடத்தைப் போற்றுகின்றது. இன்னும், ஆக்கூரில் உள்ள சுயம்பு வடிவான ஈசன் திருக்கோவில் தான் தோன்றி மாடம் என்னும் பெயர் பெற்றது. முன்னாளில் அறத்தால் மேம்பட்டிருந்த ஊர்களில்…