எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது!

எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது!   தங்கள் ஆசைகளை மக்கள் கருத்துகளாகவும் கட்சித் தொண்டர்கள்  அல்லது பொறுப்பாளர்கள் கருத்துகளாகவும் கதைவிடும் இதழ்களில்,  செயலலிதா, எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு  மாநிலங்களவை உறுப்பினர் பதவி தந்து,  வாசனுக்குப் புத்தி புகட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 அகவை முதியவரான எசு.ஆர்.பாலசுப்பிரமணிம்போல் பதவி ஆசை கொள்ளாமல் கட்சி நலன் கருதுபவர் என இதன் மூலம் வாசனுக்குப் பெருமைதான் சேர்ந்துள்ளது.  காங்கிரசு அல்லது தமாகா வில் இருந்துகொண்டே அதிமுகவாக நடந்து கொண்ட எசு.ஆர்.பாலசுப்பிரமணியம் அக்கட்சியில் சேர்ந்ததே நல்லது. ஆனால், முதலில் அக்கட்சியில்…

தமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விசய்க்குப் பாராட்டுகள்!

  தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள இந்தியத்துணைக்கண்டத்தினர் தமிழின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் தமிழைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு மாறாக மாநிலங்களவையில் தமிழுக்காகக் கொடி தூக்கினார் ஒருவர்.அவர், தமிழ் நாட்டவர் அல்லர். உத்தரகண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர். அதுவும் சமய(மத)வெறிபிடித்த ‘இராசுட்ரிய சுயம்சேவக்கு சங்கம்’ என்ற நாட்டுத்தற்தொண்டுக் கழகத்தின் பல பொறுப்புகளில் இருந்தவர். இவ்வமைப்பு நடத்தும் பாஞ்சசன்யா’ என்னும் இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகள் இருந்தவர்.ஊடகவியலாளராகவும் மக்கள் நலத் தொண்டராகவும் நன்கறியப்பெற்றவர். பழங்குடி மக்களின் நலனுக்காகப்பாடுபட்டு வருபவர்.படக்கலைஞர், கட்டுரையாளர், படைப்பாளர் எனப் பல வகைகளில்…