வள்ளுவர் சொல்லமுதம் 14 : அ. க. நவநீத கிருட்டிணன் : நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை

(வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை. நன்றி கொன்ற மகனுக்குக் கழுவாயே இல்லை. அத்துணைப் பெரிய கொடிய பாவம் நன்றி மறத்தல் என்று வள்ளுவர் வன்மையாகக் கூறுவார்.  ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் ந்நன்றி கொன்ற மகற்கு” என்பது அவர்தம் மறைமொழி. ஒருவன் செய்த நன்றி ஒன்றனை நினைந்தபோது, அவன் கொன்றாலன்ன இன்னலைப் பின்னொருகால் கொடுப்பினும் அது மறந்துபோம். அந் நன்றி உணர்ச்சி நடுவுநிலைமையினின்று…

வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்

(வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அறிவும் ஒமுக்கமும் கற்றும் கேட்டும் தெளிந்தும் பழகியும் பெற்ற அறிவே நிறைந்த அறிவாகும். “கல்வியின் பயன் அறிவு” என்று கற்றறிந்தோர் கூறுவர். தெய்வப் புலவராய திருவள்ளுவர் அறிவின் இலக்கணத்தைத் திறம்பட இயம்பியுள்ளார். கல்வி கேள்விகளின் நிறைவே அறிவு பெறுதற்கு உறுதுணை என்பதை அறிவுறுத்தக் கல்வி கேள்விப் பகுதிகளை அடுத்து அறிவுடைமை என்னும் அதிகாரத்தை அமைத் துள்ளார். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு…