வள்ளுவர் விளக்கும் வன்முறைக்கு எதிரான மருந்து – பெ.அருத்தநாரீசுவரன்

வள்ளுவர் விளக்கும் வன்முறைக்கு எதிரான மருந்து   சமுதாயத்தில் தாம் நினைத்தால் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கக் கூடிய அளவிற்கு நிறைந்த பண்புலநலன்கள் கொண்ட பெரியோர்கள் சிலர் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட பெரியோர்களை வள்ளுவர் சான்றோர் என்று குறிப்பிடுகின்றார். சான்றோர் என்ற சொல் வள்ளுவர் காலத்திற்கு முன்பு போர்க்களத்தில் போராடுகின்ற வீரர்களைக் குறித்த சொல். பிற்காலத்தில் போரிட வேண்டும் என்று தேவை இல்லாத நேரத்திலுங்கூட மனஉறுதியும் பெருந்தன்மையும் வான்குணமும் கொண்ட மனிதர்கள் உருவானார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை வள்ளுவர் சான்றோர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். … வன்முறைகள் வளர்ந்து சமுதாயத்தில்…

ஆளுங்கட்சியின் வன்முறைக்கு எதிராகக் காவல்நிலையம் முற்றுகை

ஆளும்கட்சியினர் வன்முறையைக் கண்டித்துப் பல்வேறு இடங்களில் சாலைமறியல்! காவல்நிலையம் முற்றுகை! பதற்றம்!   தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரவை, கலவை, விசிறி, வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   தேவதானப்பட்டியில் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி, காவல்நிலையம், பள்ளிவாசல் சமாஅத்து திருமண மண்டபம் முதலான பல இடங்களில் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்களும், தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர்களும் தங்களுடைய ஆளும்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுப்பதற்காக, அடுத்தவர்களுக்குக் கொடுத்த விலையில்லா மின்னுரல், மின்னரவை, மின்விசிறி போன்றவற்றை…