இனிதே இலக்கியம் – 7 அன்பே கடவுள்! : இராமலிங்க அடிகள்
7 அன்பே கடவுள்! அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே அன்புரு வாம் தேவ தேவே! “அன்பு என்னும் கைப்பிடிக்குள் அடங்கும் பெருமலையே! பெருமனையில் தங்கியிருந்தாலும் அன்பெனும் சிறு குடிலுக்குள் புகும் அரசே! அன்பாகிய வலைக்குள் அகப்படும் பெரும் பரம்பொருளே! அன்பெனும் கைக்குள் அடங்கும் அமுதே! அன்பாகிய சிறு குடத்திற்குள் அடங்கும்…
வள்ளலார் நூல்கள் பதிவிறக்கங்களுக்குக் கட்டணமில்லா இணைப்புகள்
வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் நூல்கள், அவர் பதிப்பித்த நூல்கள், அவர் நூல்களுக்கான பிறர் உரைகள், அவர் தொடர்பான நூல்களை இணைய வழியில் படிப்பதற்குப் பின்வரும் இணைப்புகளில் காண்க சீவகாருண்ய ஒழுக்கம் சீவகாருண்ய ஒழுக்கம் – 1 சீவகாருண்ய ஒழுக்கம் – 2 சீவகாருண்ய ஒழுக்கம் – 3 உரைநடை திருவருண் மெய்ம்மொழி அருள்நெறி பேருபதேசம் நித்திய கரும விதி உபதேசக் குறிப்புகள் மனு முறைகண்ட வாசகம் தொண்டமண்டல சதகம் வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் புத்தகங்கள்…
மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்! நம் நாடு சமயச் சார்பற்ற நாடு என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்தியா பலசமயச்சார்பு நாடாக விளங்குகின்றது. இதுதான் கேடுகள் யாவினும் பெருங்கேடு விளைவிக்கின்றது. சமயச் சார்பு விடுமுறைகளை நீக்கிவிட்டு எந்தச் சமயச் சார்பு நிகழ்வாயினும் ஆட்சியில் உள்ளோர் பங்கேற்காத நிலை வர வேண்டும்; குடியரசுத்தலைவர், தலைமை அமைச்சர், முதல்வர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், என உயர்பொறுப்புகளில் இருப்பவர்கள் சமயத் தலைவர்களைச் சந்திக்கக்கூடாது; எதிர்பாராமல் சந்திக்கும் நேர்வு நிகழ்ந்தாலும் அதனை வெளிப்படுத்தி விளம்பரப்படுத்தக்கூடாது. அவ்வாறில்லாமல் வாக்காளர்களைக் கவர…
இனிதே இலக்கியம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
1. எங்கும் கலந்துள்ள இறைவன் கண்ணில் கலந்தான்; கருத்தில் கலந்தான்-என் எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில் கலந்தான்;என் பாட்டில் கலந்தான் -உயிரில் கலந்தான் கருணை கலந்து. எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வண்ணம் பொதுநோக்கான இறைநெறிப்பாடல்கள் தமிழில்தான மிகுதியாக உள்ளன. இப்பாடலும் அனைவரும் பாடுவதற்குரிய பொதுநிலைச் சிறப்பு உடையது. இறைவன், அருட்பார்வை உடைய கண்ணில் கலந்திருக்கின்றான்; நற்செயல்களுக்கு அடிப்படையான நல்ல கருத்துகளில் கலந்திருக்கின்றான்; பிறர் நலம் பேணக்கூடிய உயர்ந்த எண்ணத்தில் கலந்திருக்கின்றான்; இசையாகிய பண்ணிலும் பாட்டிலும் கலந்திருக்கின்றான்; அருள்உணர்வுடன் நம் உயிரிலும் கலந்துள்ளான். எல்லா இடங்களிலும் கலந்து…
ஒளிநெறி பெருவிழா மாநாடு -சித்தி வளாகம் என்ற மேட்டுக்குப்பம்
ஆவணி 23, 2046 / செப். 09, 2015
சுத்த சன்மார்க்க மாநில முதல் மாநாடு, வடலூர்
புரட்டாசி 06 & 07, 2046 / 23 & 24, செப்.,2015
என்றென்றும் வள்ளலார் – பொறி.பக்தவத்சலம் உரை
ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை தை 20, 2046 / பிப்ரவரி 3.2015 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை: பொறி.கெ.பக்தவத்சலம்
தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு…!
– செயசிரீ சங்கர் “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச ஒளி வழிபாட்டு விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. முருகனை நினைத்துருகிக் கண்ணாடியில் அவன் காட்சியைக் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகளார், தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய …
