கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்
(கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்! ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது…
கரு. தடைச்சட்டமும் தமிழினமும் 1/3: திருத்துறைக் கிழார்
(க௪. தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3 தமிழக அரசு இன்று (28.01.1992) பயன்படுத்தும் தடைச்சட்டத்தைத் ‘தடா’ என்று இந்தியில்++ சொல்கின்றனர். ‘தடா’ என்றால் தடைசெய்யாத என்று தமிழில் பொருள்படும். ‘இந்தி’ தான் தமிழுக்கு எதிரியாயிற்றே! 21.05.1991 அன்று 10.50 மணிக்கு திரு மரகதம் சந்திரசேகரன் போட்டியிட்ட திருப்பெரும்புதூர் தொகுதிக்குத் தேர்தல் பொழிவுக்கு திரு. இராசீவு காந்தி வந்தபோது மாலையில் வெடிவைத்துக் கொல்லப்பட்டார். அதன்…
விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குந்தகம் விளைவிக்கின்றது : தலைமையர்
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…
போற்றியே தொழுகின்றோம்! -ஈழத்து நிலவன்
https://youtu.be/X7NNCsIUu2E விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக் குழந்தைகளே! – நாங்கள் விடுதலை வென்றிடக் குழிகளை விட்டு வெளியினில் வாருங்கள்! – நீங்கள் வெளியினில் வாருங்கள்! (விழிகளை மூடிக்…) உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா? (விழிகளை மூடிக்…) மானம் அழிவின்றி வாழவே உயிரைத் தானம் செய்தீரே! – இந்த வானமே போற்றும் வையகம் வாழ்த்தும் என்று நீ வாழ்வீரே! (விழிகளை மூடிக்…) நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே நாம் உமை வணங்குகின்றோம்!…
கனவல்ல தமிழீழம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கனவல்ல தமிழீழம்! மெய்யாகும் நம்பிக்கை! தமிழீழம் என்பது கனவல்ல! நேற்றைய வரலாற்று உண்மை. நாளை நிகழப்போகும் உண்மை வரலாறு! போராளிகளாக, விடுதலைப்புலிகளாக, வான்புலிகளாக, கடற்புலிகளாக, உயிர்க்கொடைஞர்களாக, எனப் பல்வகை ஈகையர் தங்கள் மனக்கண்ணில் கண்ட உண்மையே தமிழ் ஈழம்! அது வெறும் கனவல்ல! அருந்தமிழ் உணர்வும் அறிவுச் செம்மையும் அறிவியல் புலமையும் போர்வினைத்திறமும் மாந்த நேயமும் பண்பு நலனும் கடமை உணர்வும் கொண்ட ஈழத்தமிழர்கள் போர்க்களங்களிலும் பிற வகைகளிலும் தம் உயிரைக் கொடுத்ததன் காரணம் வெறும் கனவல்ல! பழந்தமிழர்கள் தனியரசாய் ஆட்சி …
மாவீரர்களைச்சிறப்பிப்போம்!-வவுனியா மாவட்ட மக்கள் குழு
மண்ணுறங்கிக் கிடக்கும் ‘மாவீரத்தை’த் தட்டி எழுப்பிச் சிறப்பிப்போம்! கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்!! ‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஈகையரை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்டமக்கள் குழு. படைவழித் தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க ஆற்றல்களின் அனைத்து வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தித் தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பகுதிகள் மீது நடத்திய நிலக்கவர்வு(ஆக்கிரமிப்பு)ப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது….
பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை
பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் படைத்தரப்பினரது செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் இதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உறுதுணை புரிந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றசெய்தியானது பல்வேறு வகைகளில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றது. (இனப்படுகொலைப்) போர் நிகழ்ந்த காலத்தை விடவும் தற்போது பல பகுதிகளிலும் திடீர் திடீரென புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன. வவுனியாவிலிருந்து ‘ஏ–9’ வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கிச்…
மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! -இலக்குவனார் திருவள்ளுவன்
: மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த நிலப்பகுதி, பெருங்கடல்கோள்களால் தனித்தீவாக மாறிய நிலப்பகுதி, அதுவே இலங்கை என்றும் ஈழம் என்றும் அழைக்கப்பெறும் தமிழர்க்கான நிலப்பகுதி. இங்கோ சாதி வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்த ஆரியச் சமயத்தால் அழிவினைச் சந்தித்தது தமிழகம். அங்கோ வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்ததால், அருள்நெறி போற்றும் புத்தச் சமத்தினரின் இன வெறியால் சிங்களம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தித்…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 06 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – இன் தொடர்ச்சி) 6/6 இர.சிறீகந்தராசா: நீங்கள் எவ்வளவு காலம் மொத்தமாக உள்ளே இருந்தீர்கள்? து.வரதராசா: மூன்றரை மாதங்கள் இருக்கும். இர.சிறீகந்தராசா: நீங்கள் வெளியில் வந்ததும் அங்கே என்ன செய்தீர்கள்? து.வரதராசா: நாங்கள் வெளியில் வந்தவுடன் கடமையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. ஏனென்றால், எங்களை மீண்டும் கடமையாற்ற விடுவதற்குப் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ அமைச்சு ஆகியவற்றிடம் இருந்து நலவாழ்வுத் திணைக்களத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையை எடுப்பதற்குக் கொஞ்ச காலம் எடுத்தது. அதன் பின்புதான்…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 இன் தொடர்ச்சி) 5 இர.சிறீகந்தராசா: நீங்கள் அங்கு இருந்தபொழுது உடனிருந்த கைதிகள் உடலளவிலோ உளவியலளவிலோ ஏதேனும் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகளைக் காண முடிந்ததா? து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட! மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று. இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள்! து.வரதராசா: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள்….
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 இன் தொடர்ச்சி) [இனிவரும் பகுதிகளில் கொழும்பு நான்காம் மாடியில் தான் எதிர்கொண்ட இன்னல்களையும், தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் தான் மேற்கொண்டு வரும் பணிகளையும் விவரிக்கின்றார். தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையான இன அழிப்பிற்குப் பன்னாட்டு நீதி உசாவலின் (விசாரணையின்) மூலமே தீர்வு கிட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவதோடு, உள்நாட்டு உசாவல் (விசாரணை) எந்தப் பயனையும் தராது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றார். ‘ஈழமுரசு’ இதழுக்காக அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.] இர.சிறீகந்தராசா: நீங்கள் கிளிநொச்சி தடுப்பு…
