அவன் வருகின்றான்!…. – கசமுகன் பிள்ளயாந்தம்பி
தமிழர்களை அழிப்பேன் தமிழையும் அழிப்பேன் தணிக்கைகள் பல செய்வேன் தமிழ் இனத்தை தவி தவிக்கச் செய்து தரணியில் இல்லையெனச் செய்வேன்!….என்று தனி மனித உரிமைகளைத் தட்டிக் கழித்தான் தனி நாடு கேட்டோம் தத்துவங்கள் பல பேசி, தந்திரங்கள் என நினைத்து, தரித்திரத்தைத் தேடிக் கொண்டான்!…. தமக்கென இருக்கிறான் ஒருவன் தக்க சமயத்தில் வருவான் தயக்கமென்ன தமிழா! தலை நிமிர்ந்து நில்லு தமிழ் இனத்தின் தனித்துவத்தைச் சொல்லு உலகிற்கு!…. http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211614
காய்கதிர்க் கண்ணகி – – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்
காய்கதிர்க் கண்ணகி (அறமே வென்றது) அறிவின் தாயே! அற்புதத் தாயே! எரிதழல் நெஞ்சம் இடும்பை தாங்க மூதின் மகளாய் மொய்ம்பின் உருவாய் ஏதிலி யாயுழல் இற்றைநாள் தமிழரின் அரசியல் உழவில் அன்புநீர் பாய்ச்சி முரசினை அறைந்து முனைமுகம் நின்று உரமுடன் நாளும் ஊக்கம் காட்டி இருபத் துமூன் றாண்டுகள் முயன்று கருவிற் சுமந்த காளையை மறுமுறை ஈன்ற குயிலே! ஈகியின் தாயே! தளரா உழைப்பால் தமிழ்நிலம் சுற்றி களத்தினை வென்ற காய்கதிர்க் கண்ணகி! உந்தன் அழுகையே உரிமை மீட்டது! இந்தியச் சிறையை இடித்தெ…
கருப்புச் சூரியன்களுக்கு நடுவே – பாவலர் வையவன்
கறுக்கும் கருப்புச் சூரியன்களுக்கு நடுவே தளிரிலையால் தடவிவிடும் அன்புத்தாய் – நன்று அறிவித்தாய்! மூவுயிரைக் காக்கும் உந்தன் ஆணை ! – உனக்கு நிகராகக் காட்ட முடியாதொரு ஆணை !
மக்கள் குரல்கொடுத்தால்தான் பேரறிவாளன் விடுதலை ஆவான்! – தாயார் அற்புதம்
பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் உசாவல் அலுவலர் அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.” “சிறையில் இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை…
10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் : இராமதாசு
10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தி அறிக்கை வழி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசயா என்ற மனநலம் தாக்கப்பட்ட பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். உதவியற்ற அந்த ஏழைப் பெண் மீது சென்னை உயர்நீதிமன்றமும், நீதிபதிகளும் காட்டிய பரிவும்,கருணையும் பாராட்டப்பட வேண்டியவை. விசயாவைப்…
தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்க!
இலங்கைக்குச் சுற்றுலா புகவுச் சீட்டு பெற்று இதழாளர் மகா.தமிழ் பிரபாகரன் சென்றுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன் அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவர் வந்த இரண்டு நாளிலும் உடல் நலிவால் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், சிரீதரன் அவர்களுடனும் வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி(பிள்ளை) அவர்களுடனும் அவர்கள் மேற்கொண்ட தொகுதி நலப்பணி தொடர்பான பயணத்தில் உடன் சென்றுள்ளார். இம்மூவரும் வலைப்பாடு என்னும் ஊரில் தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப்…
