(வள்ளுவர் சொல்லமுதம் 7 : அன்பும் அறமும். 2 : அ. க. நவநீத கிருட்டிணன் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 6 விருந்தும் மருந்தும் ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்பது தமிழில் வழங்கும் திருந்திய பழமொழி. தொன்று தொட்டு விருந்தும் மருந்தும் தொடர்புடையனவாகவே விளங்கி வருகின்றன. ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’, என்பார் அருந்தமிழ் மூதாட்டியார். தெய்வப் புலவராகிய திருவள்ளுவரும்,” விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.” என்று விருந்தையும் மருந்தையும் பொருந்தவே தெரிந்து கூறினர்.விருந்து என்னும் சொல்…