சதுரகராதி அறிமுக உரை – தமிழ் சூசை

இனிய நண்பர்களே, வணக்கம்.    எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5 30. மணி, மாசி 08, 2047 – 20 02 2016 திருவரங்கம் இராசவேலர் செண்பகத்தமிழரங்கில் இலக்கணத்தொடரில் சதுரகராதி அறிமுக உரை உள்ளது. உரிச்சொல் பனுவல் காலம்,  நிகண்டுகாலம், அகராதிகாலம், சதுரகராதி அமைப்பு, சதுரகராதி சிறப்பு என உரை தயாரித்து உள்ளேன். வாய்ப்புள்ள மாணவர்கள், நண்பர்கள் வருக! – தமிழ் சூசை

வீரமாமுனிவரின் ‘கிளாவிசு’ நூலின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடும் கருத்தரங்கமும்

  தை 27, 2047 / 11 பிப், 2016இல் ஏலாக்குறிச்சியில் கருத்தரங்கும் நூல்வெளியீட்டு விழாவும் நடைபெறஉள்ளன . ‘கிளாவிசு’ என்னும் இலத்தீன் சொல் சாவியைக்குறிக்கும்; உயர்தமிழ்இலக்கியத் திறவுகோலாக இப்பெயரில் வீரமாமுனிவர் இலத்தீனில் எழுதிய சிறந்த தமிழ்இலக்கணம்; இதனை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை.   முதுமுனைவர் ச. இராசமாணிக்கம் என்ற துறவி ஆங்கிலத்தில் பெயர்த்தார். வெளிவரவில்லை. நான் தமிழில் எழுத்ததிகாரம் மட்டும் ஆய்வுரையுடன் மொழிபெயர்த்துள்ளேன். இந்நூல் அன்று வெளியிடப்பெறுகிறது. கருத்தரங்கில். மூதறிஞர் செ வை சண்முகம்,  முனைவர் பா வளனரசு,  முனைவர் திலகவதி,…

நம்மொழியை நாமறிவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்

நம்மொழியை நாமறிவோம்!   இத்தாலி நாட்டிலிருந் திங்கே வந்து இயேசுபிரான் கருத்துகளைப் பரப்பு தற்கே முத்தான தமிழ்மொழியைப் பேசக் கற்று முதலில்தம் பெசுகியெனும் பெயரை மாற்றித் தித்திக்க வீரமா முனிவ ரென்று திருத்தமுறத் தமிழினிலே சூட்டிக் கொண்டு வித்தாகக் கிறித்துவத்தை விதைப்ப தற்கே வீதிகளில் மதக்கருத்தை உரைத்து வந்தார் ! ஓரிடத்தில் உரையாற்றும் போது பேச்சில் ஒருகோழி தன்னுடைய குட்டி தன்னைப் போரிட்டுக் காப்பதைப்போல் என்றே உவமை பொருத்திச்சொல்லக் கேட்டமக்கள் சிரித்து விட்டார் கூறியதில் தவறேதோ உள்ள தென்று கூட்டத்தைப் பார்த்தவரும் கேட்கும் போது…