சட்டச் சொற்கள் விளக்கம் 291-295: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 291-295 291. Academic year கல்வி ஆண்டு கல்வி ஆண்டு என்பது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் காலத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை  உள்ள காலத்தைக் குறிப்பதாகும்.     பள்ளிகளில் கல்வி ஆண்டை முதல் பருவம்(காலாண்டுப் பருவம்), இரண்டாம் பருவம்(அரையாண்டுப் பருவம்), மூன்றாம் பருவம்(முழு ஆண்டுப்பருவம்) என மூன்று பருவங்களாகப் பிரித்து மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கிறார்கள். கல்லூரிகளில் இரு பகுப்புகளாக முதல்  பருவ முறை…

சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 281-285 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 286. Academic course   கல்விசார் பாடப்பிரிவு   பாடநூற் கல்வி, செயல்முறை சாராப் படிப்பு பாடநூல்களின் மூலம் மட்டுமல்லாமல் பாடத்திட்டம் சார்ந்த செயல் முறை மூலமும் கற்பிக்கப்படுவதே செயல்முறைக் கல்வி. பாடநூல்களை மட்டும் அடிப்படையாகக்  கொண்டு கற்பிக்கப்படுவது பாடநூற்கல்வி்.   287. Academic experience கல்விப் பட்டறிவு   கல்விப் பணியறிவு   கல்வி வாழ்க்கை தொடர்பான  மாணவர் பெறும் பட்டறிவும் கல்வித்துறையில் பயிற்றுவிப்பில் பணியாற்றுநர் பெறும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 281-285 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 281-285 281. Abutment முட்டிடம்    உதைவு   இரண்டு உடைமைகளின் முட்டிடம்.   அணைக்கட்டுக் கட்டமைப்பின் இரு முனைகளிலும் இருக்கும் இயற்கை நிலப்பரப்பைக் குறிக்கிறது.   உதைமானம் என்றால் முட்டு எனப்பொருள். அதனடிப்படையில் உதைவு எனப்படுகிறது. 282. Abuttals   தொடு எல்லை   தொட்டடுத்த பகுதி   நிலப்பகுதிகளைத் தொடும் நிலத்தின் எல்லைப் பகுதிகள்.   [இந்திய மீன்பிடி சட்டம், 1897,  பிரிவு 4(2)(Section 4(2) in…

சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 276.Abuse of process சட்டநடவடிக்கை முறைகேடு   சட்ட நடவடிக்கையைத் தீய எண்ணத்துடனோ தவறான நோக்கத்துடனோ தவறாகவோ பயன்படுத்துதல்.   சட்ட நடவடிக்கைகளில் முறைகேடு நிகழாமல் இருக்க முறை மன்றங்கள் கருத்து செலுத்துகின்றன. சட்ட நடைமுறைத் தகாப்பாட்டைத் தடுப்பதற்காக அல்லது நீதிமுறையின் நோக்கங்களைப் பாதுகாக்க மட்டுமே முறைமன்றம் மு.த.அ.(முதல் தகவல் அறிக்கையை) -ஐ இல்லாமல் ஆக்கலாம். குற்றமற்ற ஒருவர் தேவையின்றி வழக்கிற்கு உள்ளானால் அல்லது சரியான ஏதுக்கள் இன்றி…

சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 271.abuse of discretion உளத்தேர்வின் பிழைபாடு      முடிவெடுப்பதற்கு உளத்தேர்வைத் தவறாகப் பயன்படுத்தலை இது குறிக்கிறது.     குற்ற வழக்கிலும் உரிமை வழக்கிலும் கீழமைவு மன்றங்களின் முடிவுகளை மறு ஆய்வு செய்கையில் மேல்முறையீட்டுமன்றம், உளத்தேர்வு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக என ஆராயும்.   discretion  – விருப்புரிமை என்றுதான் சொல்லிவந்தனர். அவ்வாறாயின் விருப்பு வெறுப்பிற்கேற்ப எடுக்கும் முடிவு எனப் பொருளாகிறது. எனவே, அவரது மனம்…

சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 266. Abundance மிகுதி   ஏராளம் பேரளவு   எ.கா. இம்மன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.   குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் இதற்கு முன்பே மிகுதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர். 267.Abundant ஏராளமான   மிகுதியான பேரளவான   மிக அதிகமான அல்லது மிகையான அளவில் வழங்குதல். செழிப்பையும் குறிக்கிறது. 268.Abundant caution மிகு எச்சரிக்கை   எ.கா. : உணர்வு பூர்வமான இவ்வழக்கை நீதிமன்றம் மிகு…

சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 261. abstracted பிரித்தெடுக்கப்பட்ட   கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய   வேறு சிந்தனையில் உள்ளதால் சுற்றி நிகழ்வது குறித்துக் கருத்து செலுத்தாமை 262. Abstraction பிரித்தெடுத்தல்     கருத்துப்பொருள்; கவர்ந்துகொள்ளல்; கவனமின்மை   தவறான கையாளுகைக்காக நிதியை அல்லது நிதிக்கணக்குகளை உரிய இசைவின்றி எடுத்தல் ஊறு விளைவிக்க அல்லது வஞ்சிக்கும் நோக்கில் எடுத்தல் 263. absurd பொருளற்ற   விழலான ; காரண காரியத்…

சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 256. abstract of judgment தீர்ப்பாணைச் சுருக்கம்   தீர்ப்பின் சுருக்கம் அல்லது தீர்ப்பாணையின் சுருக்கம் என்பது, ஒரு தீர்ப்பின் எழுதப்பட்ட சுருக்கமாகும்.   வழக்கில் வென்றவருக்கு(தீர்ப்புக் கடனாளி) இழப்பீட்டு எதிர்வாதி எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.   தீர்ப்புத் தொகை, நீதிமன்றச்செலவுகள், இழப்பீட்டு எதிர்வாதி கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய உத்தரவுகள், செலுத்தப்பட வேண்டிய வட்டி விகிதம், ஆகியவை குறிக்கப்பெற்ற சுருக்கம்  ஒப்புக்கொள்ளப்பட்டு,…

சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 251. Abstinence தவிர்ப்பு   விட்டொழித்தல், உண்ணாநோன்பு, துய்ப்புத் தவிர்ப்பு   விருப்பமான ஒன்றை விலக்கல் அல்லது செய்யாது விடுதல்.   காண்க: abstain; 2. Abstaine  252. Abstract                           பொருண்மை;   பொழிப்பு; பிழிவு; கருத்தியலான; உரைச்சுருக்கம் எடுகுறிப்பு; சுருக்கக் குறிப்பு, (சுருக்கக்குறிப்புகள்,).   ஒரு நூல் அல்லது ஆவணத்தின் அடிப்படைக் கருத்தின் சுருக்கம் மக்கள் அல்லது பொருட்கள் பற்றிய பொதுப்படையான கருத்தைக்…

சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 : இலக்குவனார் திருவள்ளுவ

(சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 246. abstain. V   தவிர்; விலக்கு விலகியிரு; தவிர்த்திரு (வி)   விலகி யிருத்தல் ; தவிர்த்திருத்தல் (பெ)   வாக்களித்தல் போன்ற எதிலும் பங்கேற்றுக் கொள்வதிலிருந்து விலகி யிருத்தல். 247. Abstaine  விட்டொழிப்பவர்   ஒரு பழக்கத்தை விட்டொழிப்பவர். பொதுவாக போதை பொருள்களை உட்கொள்வதைக் கைவிடுவதைக் குறிப்பிடுகிறது.   உணவைவிட்டொழிப்பவரைக் குறிக்குமிடத்தில் (உண்ணா)நோன்பு எனப் பொருளாகிறது. 248. Abstaining from carrying out…

சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 241. Absorb ஈர்த்துக்கொள்   உட்கொள் உறிஞ்சு ஏற்றுக்கொள்   திரவம், வெப்பம் போன்றவற்றைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ளுதல் 242. Absorbed in the post பணி ஈர்ப்பு   பணியிடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார். 243. Absorber ஈர்த்துக் கொள்பவர்     பொதுவாக உறிஞ்சியைக் குறிக்கிறது. எனினும் ஒருவரை ஈர்த்துக் கொள்பவரையும் குறிக்கிறது. 244. absorption ஈர்த்துக்கொளல்   ஒன்றை ஈர்த்துக் கொள்ளல்   பொதுவாக வழக்கில் நீர்…

சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 236. Absolutely முற்றிலும்   தனித்த நிறைவாக ஐயத்திற்கிடமின்றி ஆம்.(உடன்பாட்டைக் குறிக்கையில் ஆம், சரி என்ற பொருளில் வரும்.) 237. Absolutely unavoidable முற்றிலும் தவிர்க்க இயலாதது   செய்தலோ செய்யாமையோ ஒதுக்கித் தள்ள வழியின்றி இன்றியமையாது நிகழ்த்தும் சூழலே முற்றிலும் தவிர்க்க இயலாதது ஆகிறது. 238. Absolve   விடுவி   நீக்கு   பழியினின்று நீக்கு குற்றச்சாட்டினின்று விடுவி கடமை அல்லது…

1 2 4