இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு
தமிழ்ப்போராளி இலக்குவனாரை எப்போதும் தவறாமல் மறவாமல் போற்றும் செந்தமிழன் சீமான் புகழுரை ஐயா இலக்குவனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – செந்தமிழன் சீமான் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப்பேரறிஞர்! அதுநாள்வரை மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப் பதிவை அன்னைத் தமிழில் “உளேன் ஐயா” என்று உரக்கச் சொல்ல வைத்த பெருமகன்! சங்கப் பாடல்களை முதன் முதலாகச் சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி! தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் ஊட்டித் தன்னந்தனியனாக…
