இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 07: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) இயல் – 3 இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலமாகும். நாட்டு விடுதலை வேட்கை மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதியும் அவனைப்போலப் பிற கவிஞர்களும் நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை இயற்றினார்கள். செய்யுள் என்ற சொல்லைக் கவிதையாக்கியவர் பாரதி. மிகவும் எளிய சொற்களால் உள்ளத்து உணர்வைத் தூண்டும் வகையில் பாடினார். நாட்டு விடுதலையைப் பாடிய…
பேராசிரியர் சி.இலக்குவனார் சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டானவர்
தமிழ் வழிக்கல்விக்கு ஆக்கம் தேடியவர் பேராசிரியர் சி.இலக்குவனார் பகுத்தறிவு நோக்கில் பெரியாரைப் பின்பற்றினார். மொழிநோக்கில் மறைமலை அடிகளாரைப் பின்பற்றினார். இந்தி எதிர்ப்பில் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் பின்பற்றினார். வறுமையிலும் செம்மையுடையவராக விளங்குவதில் புலவர் பெருஞ்சித்திரனாரைப் பின்பற்றினார். புறநானூற்றில் வருகின்ற வேலைக் கையிலெடுப்பது போலத் திண்மையோடு (வலிமையோடு) வாழ்ந்து காட்டினார். வன் தொடர்களை மிகுதியாகப் பின்பற்றினார். வல்லினப் பேராசியராய் விளங்கி இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர் பக்திக்காகப் பயணம் செய்தனர். பக்திக்காகப் பயணம் செய்த தமிழ்நாட்டில் முதன் முதலாக…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) மகிழ்ச்சி ததும்பும் மாநட் பினர்போல் வேடிக் கையுடன் வியப்புச் சொற்களும் கலந்துரை யாடியே காத்தவீ ரனுக்குப் பலியிடுங் கடாவைப் பொலிவுறச் செய்து இழுத்துச் செல்லு மேழை களிடை 6 துள்ளுங் கடாப்போல் தோற்றம் விளைத்து அடைந்தனர் முடிவில் யாருமில் காட்டை. அவருடை தங்கை யவனுடை மையலில் வீழ்க் காரணம் விளைத்த பிழைக்கு பழிகொள வெண்ணினர் விழிக ளழன்றன ஒருவரை யொருவ ருற்று நோக்கினர் கைகள் சென்று கைவாள் தொட்டன…
மானமிகு மறவன் இலக்குவனார் ! – மா. கந்தையா –செயா
தோற்றம்: கார்த்திகை 01, 1940 / நவம்பர் 17, 1909 மறைவு ஆணி 18, 2004 / செத்தம்பர் 03, 1973 மானமிகு மறவன் இலக்குவனார் ! ஏனத்தைத் தூக்கிக்கல்லுக்கு எழுச்சிப்பா பாடும்மண்ணில் வானத்தை நோக்கி வணங்கி வழியனுப்பும்மன ஊனமுற்றோர் உலவிடும் ஈனமனத்தாரை இனமொதுக்கி வானமே வீழ்ந்தாலும் தான்வீழா தகைமையாளர் ! ” அள்ளிக்கொள் அருந்தமிழைவிலை சொல்லிக்கொடு ” எனப்பெரும் புள்ளிகள் கூறும்போதுஎரி கொள்ளியால் சுட்டெரிப்பார் . வெள்ளிநிற மீசைமேலுதட்டில் துள்ளித்துடிக்கும் சினம்கொண்டால் அள்ளி யணைத்துத்தமிழை சொல்லிவளர்ப்பதில் தாயாவாள் ! வாய்மையே வெல்லுமென்ற…
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3 தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார். வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 6 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6 அழகிய தையலை யன்புடன் மணக்க செம்ம லெவனுமி ச்சிறந்த நகரில் மனப்பெரு மையுடன் மகிழ்ந்து வருவன் மணத்தால் நமது பணத்தைப் பகுக்க எண்ணினோ மல்ல; எண்ணி னவளும் வேளி ரொருவனை விரும்பி மணப்பின் பெருமை யுமுண்டு பெரும்பய னுறுவோம். அவ்வித மின்றி யனைவரும் வெறுக்க அழகிய தங்கை யற்பக் கூலியை சிறுத்துப் பெருத்துஞ் செல்வ மிலானை மணந்தால் வருவது மானக் கேடென எழிலர சிக்குறு மின்ப வாழ்விற் சிறுதி…
தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது ! – சி.இலக்குவனார்
உலக மொழிகளை எல்லாம் கற்று ஆராய வல்ல வாய்ப்பு ஏற்படுமேல் தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது என்று நிலைநாட்ட இயலும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று. ஓரிடத்தில் தோன்றிய மாந்தர் பல்வேறு இடங்கட்கும் பிரிந்து சென்று பல வகையாலும் வேறுபட்டு விளங்குகின்றனர். மாந்தர் முதலில் தோன்றிய இடம் தென்னகமே என்று மாந்தர் நூல், வரலாற்று நூல், நில நூல் ஆராய்ச்சியாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இக் கூற்று வலுப்பெற்று நிலை நாட்டப்படுமேல், தமிழே உலக மொழிகளின்…
முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே! -பேரா.சி.இலக்குவனார்
உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே என்பதும் உண்மையோடுபட்ட செய்திகளே யாயினும் இன்னும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் இந்நாட்டில் தோன்றியவரே என்பதும் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதும் நிலைநாட்டப்பெற்றுவிட்டன. பேராசிரியர் சி.இலக்குவனார் பழந்தமிழ்: பக்கம் 42
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3 தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும் அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார். எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால் ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும்….
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 06: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6 1959ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிய வருமாறு அழைப்புக் கிடைத்தவுடன் மதுரை சென்றார். கலைத்தந்தை தியாகராசச் செட்டியாரின் அரவணைப்பில் 1965 தொடக்கம் வரை மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். புலவர் விழா நடத்தி, மாணவர்களிடம் தமிழ் உணர்வையும் தமிழ்ப்பற்றையும் வளர்த்தார். தொல்காப்பிய ஆராய்ச்சி’16 என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலையும் பழந்தமிழ்’17 என்னும் நூலையும் எழுதினார். மேலும் ‘குறள்நெறி’ என்னும் பெயரில்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 1: இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01 இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே!…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 05: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) 05 இலக்குவனார் அரசர் கல்லூரியில் பயின்ற போதுதான், நூலகத்தில் இருந்த மொழியாராய்ச்சி பற்றிய ஆங்கில நூல்களைப் படித்து, மொழி ஆராய்ச்சி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். கால்டுவெல் எழுதிய ஒப்பற்ற “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண” நூலையும் இங்குதான் கற்றார். தமிழ் மொழியின் தொன்மை, தூய்மை, வளமை, இனிமை முதலியன பற்றி நன்கு அறிந்தார். தமிழ்நாட்டில் பேராயக்கட்சி (காங்கிரசு) பிராமணர்களின் செல்வாக்குக்கு உட்பட்டுப் பிராமணர்களின் தலைமையில் இயங்கி வந்தது. நீதிக்…
