நம்மை அணுகி நலங்காப்போம் நாமென்றே நிம்மதியாய் நிற்கும் நிழற்சுற்றம் – வெம்மைவரின் கோதுவேர்த் தாகமறக் கொட்டுமழை போன்றதுவே தீதொழிய நன்மை செயல் செயற்கண் நுணங்கித் திறஞ்சேர்த்துப் பின்னர் அயல்நின்றாங்(கு) ஆர்குறைகள் ஆயும் – இயல்பதனைத் தட்டாதார் வெல்வார், தகவிலார்க்(கு) ஏதுசெயம் பட்டாங்கில் உள்ள படி படிக்கும் பொருளுணர்ந்து பட்டறிவோ டுள்ளம் துடிக்குநிலை கொண்டோர் தொழிற்செய்! – விடுத்ததனை அஞ்சுமனம் கொண்டே அறிவில்லா மூடராய்த் துஞ்சுவதோ மாந்தர் தொழில் தொழிற்சிறக்கப் போராடித் தொல்லைபல பெற்றும் உழைப்பினுல கென்றும் உதவும் – குழியடிகாண் கல்லை உடைக்கின்நீர் காட்டும்…