கருவிகள் 1600 : 121 – 160 : இலக்குவனார் திருவள்ளுவன்

  121.  இடைவீழ் மழைமானி    –    interceptometer  :        மரங்களின் கீழ் அல்லது இலைதழைகளின் வழியாக விழும் மழையளவை அளக்கும் மழைமானி. இடைவெட்டு மழைநீர் அளவி (-இ.) எனச்சொல்வதைவிட இடைவீழ் மழைமானி என்பது ஏற்றதாக அமையும்.     122.   இடையீட்டு அளவி –  slip gauge / Gauge block / gage block / Johansson gauge / Jo blocks  : இடைவெளியைத் துல்லியமாக அளவிடும் கருவி. நேர் பொருளாக நழுவு அளவி / நழுவல் அளவி என்றெல்லாம் சொல்லாமல்…

கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf

 28. குறுமி- dwarf    ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1),…

கலைச்சொல் தெளிவோம்! 5.] உயரமும் உம்பரும் : இலக்குவனார் திருவள்ளுவன்

உயரமும் உம்பரும்     height-உயரம்எனவேளாணியல், பொறி-நுட்பவியல், கணக்கியலில் பயன்படுத்து கின்றனர். ஆனால், elevation-உயரம்எனவேளாணியல், புவியியல், மனைஅறிவியல், மருத்துவயியல்ஆகியவற்றில்பயன்படுத்துகின்றனர். அதேநேரம், உயிரியல், பொறி- நுட்பவியல், கணக்கியல், கால்நடைஅறிவியல்ஆகியவற்றில்ஏற்றம்எனப்பயன்படுத்துகின்றனர். ஆட்சியியலில்உயர்வு, உயர்த்துதல், ஏற்றம்எனவும்வேறுபொருளில்கையாளப்படும்பொழுதுமுன்புறத்தோற்றம், மேடுஎனவும்பயன்படுத்துகின்றனர். எனவேஇரண்டையும்வேறுபடுத்திக்குறிப்பிடவெண்டும். சங்கஇலக்கியங்களில்உம்பர், உவணம்என்னும்சொற்கள்உயரத்தைக்குறிக்கின்றன. உம்பர்வரும்சிலஇடங்கள்வருமாறு: பன்மலர்க்கான்யாற்றுஉம்பர்க்கருங்கலை (நற்றிணை : 119.6) ஈனும்உம்பரும்பெறல்அருங்குஉரைத்தே (ஐங்குறுநூறு : 401.5) உம்பர்உறையும்ஔிகிளர்வான்ஊர்பாடும் (பரிபாடல்: 11.70) இமையத்துஉம்பரும்விளங்குக! (கலித்தொகை : 105.75) உம்பர்என்பதுஉயர்ச்சியைக்குறிக்கிறது. எனினும்சிலஇடங்களில்ஓரிடத்திற்குஅப்பால்உள்ளதொலைவுஅல்லதுஉயரத்தைக்குறிக்கிறது. உயரம் – height உம்பர் – elevation, elevated spot – இலக்குவனார் திருவள்ளுவன்