சிட்டினி நகரில் திருக்குறள் மாநாடு

  ஆசுதிரேலியாவில் பேரா.மறைமலை இலக்குவனார்     ஆத்திரேலியா சிட்டினி நகரில்  சித்திரை 13, தி.பி.2045 / ஏப்பிரல் 26, கி.பி. 2014 சனிக்கிழமை திருக்குறள் மாநாடு நடைபெற்றது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார், ஈழப் பேராசிரியர் சிவகுமாரன் மயிலாடுதுறைப் பேராசிரியர் சிவச்சந்திரன் முதலான பலரும் கலந்து கொண்டனர். ”திருக்குறள் ஒரு பல்துறைக்கலைக்களஞ்சியம்”என்னும் தலைப்பில்  பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவாற்றினார். குறள் பரப்பாளர் எழுத்தாளர் மாத்தளை சோமு அங்குள்ள தமிழன்பர்களுடன் இணைந்து இம் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.  

வள்ளுவர் கூறும் வாய்மை-மு.ஏழுமலை கலை.மு.,

  பொதுவாக உலக வழக்கில் ‘உண்மை’ ‘வாய்மை’ என்னும் இரு சொற்களையும் ஒரு பொருள் குறிப்பனவாகவே மக்கள் வழங்கிவருகின்றனர். ஆனால், இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருளைச் சுட்டி நிற்பனவாகும்.   உண்மை என்னும் சொல், உள்ளதை அல்லது நிகழ்ந்த ஒன்றைக் குறிப்பது. மாங்காய் புளிக்கும்; கரும்பு இனிக்கும்; மரம் முறிந்தது; இவை அனைத்தும் உண்மைகள். முயல் கொம்பு; வாடாத நறுமலர்; தேயா நிலவு; இவை இல்லாத அல்லது நிகழாத இன்மைப் பொருள்களைச் சுட்டுவன. இதனின்று உண்மை என்னும் சொல் இன்மை என்பதன் எதிர்ச்சொல் என்று…