வேதங்களை உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும்
வேதங்களை உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும் இளமையில் நான் வேதங்களை உருப்போட்டது உண்டு. உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும். இப்படி இரத்தம் வருவதற்கு மூலகாரணம் என்ன என்று மருத்துவர் பலரைக் கேட்டேன்…………. ஒரு மருத்துவர் என்னைக் காலையில் ஓதுகின்ற உபநிடதத்தையும், வேதங்களையும் 15 நாட்கள் வரை நிறுத்தி வைக்கச் சொன்னார். உபநிடத்தையும், வேதத்தையும் நிறுத்தி வைத்துத் தமிழையே ஓதினேன். அப்பொழுது இரத்தம் வரவில்லை. அன்றிலிருந்து சமற்கிருதம் ‘இரத்த மொழி’ என்று முடிசெய்தேன். தமிழுக்கும்…
தமிழரிடமிருந்து பெற்றனவற்றைத் தமக்கே உரியன என்கின்றனர் ஆரியர் – மறைமலையடிகள்
இவ்வாறு தத்துவ ஞானங்களும் அவை திருந்த விளக்கிய உபநிடதம், சிவாகம் முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற்றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூல்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியன எனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப் பெறார் எனவும் கூறுதல் சிறுமகரானும் எள்ளிநகையாடற்பாலதாம் இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது தீட்டின மரத்திற் கூர் பார்த்தல் ஒப்பா, நமக்கு அறிவு கொளுத்திய பண்டைத் தமிழ் மக்கள் மரபினராம் நம்மனோர்பாற் செய்து போதரும் படித்தொழுக்கம் மிகப் பெரிது! அவர்…
அமெரிக்கத் தூதரகத்தில் ஒலித்த அழகு தமிழ்!- விகடன் வாசகர் விசயலட்சுமி
அமெரிக்கா செல்வதற்கான குடியேற்ற இசைவு பெற (புகவுச்சீட்டு -விசா) நேர்காணலுக்கு அமெரிக்கத்தூதரகம் (Cஒன்சுலடெ) சென்றிருந்தோம். அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து நாம் மறுமொழி அளிப்பது சிரமமாக இருக்கும் என்று தோன்றியதால், நேர்காணல் தமிழில் வேண்டும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். நேர்காணலின்போது மொழி பெயர்ப்பாளருக்காகக் காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஆகியும் மொழி பெயர்ப்பாளர் யாரையும் காணாமல் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக் கொண்டு, எங்களை நேர்காணல் செய்ய இருந்த குடியேற்ற அதிகாரி ஒரு பெண் என்பதால் ‘குட் மார்னிங்…
பார்க்கும் இடமெல்லாம் பைந்தமிழே!
உழவும் கலப்பையும் காரும் கயிறும் குண்டையும் நுகமும் சாலும் வயலும் வாய்க்காலும் ஏரியும் மடுவும் ஏற்றமும் பிறவும், பயிரும் களையும் நட்டலும் கட்டலும் முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளால் இயன்றனவே. தமிழர்கள் வசித்துவரும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கடையும் புழைக்கடையும் கூரையும் வாரையும் கூடமும் மாடமும் தூக்கும் தூணும் கல்லும் கதவும் திண்ணையும் குறமும் தரையும் சுவரும் மண்ணும் மரனும் மற்றவும் தமிழே. தலையும் காலும் கண்ணும் காதும் மூக்கும் மூஞ்சியும் வயிறும் மார்பும் நகமும் சதையும் நாவும் வாயும் பல்லும்…
உயர்திணை, அஃறிணைப் பாகுபாடு தமிழரின் நுண்ணறிவிற்கு அடையாளம்
ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகார முதலிலேயே உலகியற் பொருள்களை உயர்திணையென்றும், அஃறிணையென்றும் பகுத்தோதினார். எம் அரிய நண்பர்கள்! இப்பாகுபாட்டின் அருமையும் நுட்பமும் நாமுணராதிருக்கின்றோம். பிறமொழிகளில் எங்காயினும் இத்தகைய நுண்பகுப்பு உளதா என்று ஆராய்வோமாயின் அப்போது இதன் பெருமை நன்கு தெளியக் கிடக்கும். ஆங்கில முதலான மேல்நாட்டு மொழியிலெழுதப்பட்ட இலக்கண நூல்களை இடைவிடாது எழுத்தெழுத்தாய் ஆராய்ந்து பார்ப்பினும் அற்றின்கண் இவ்வுரிமையை பெரிய இலக்கணப் பாகுபாடு ஒரு சிறிதுங் காணப்படாது, அன்றி, இந்திய நாட்டிற் சீர்த்தி பெற்ற மொழியாய்ப் பயிலப்படும் வடமொழியிலேனும் இம்முறையுண்டோ வெனின் ஆண்டும்…
தாயன்பும் தாய்த்தமிழும் – சாலை இளந்திரையன்
அணைக்கட்டால் மறித்தாலும் வாய்க்காலாகி அதிகவளம் தருகின்ற ஆற்றைப் போல இணையில்லா ஈகத்தால் எளியோர் தம்மை ஏற்றெடுத்துக் காப்பாற்றும் சான்றோர் போல கணிப்பரிய பெரும்புகழை ஈட்டி வைத்துக் காலத்தை வென்றிருக்கும் தமிழி னோடு தணிப்பரிய அன்புடனே பழகு கின்றேன் தனியன்புத் தாயன்பைக் காணு கின்றேன். – சாலை இளந்திரையன்: தாய் எழில் தமிழ்: தாய்மொழி: 14
தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்
கொட்டு முரசே! எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் கட்டுத் தொலைந்ததென்று கொட்டு முரசே! இல்லாமை என்னும்பிணி இல்லாமல் கல்விநலம் எல்லார்க்கும் என்றுசொல்லி கொட்டுமுரசே – வாழ்வில் பொல்லாங்கு தீர்ந்ததென்று கொட்டு முரசே! சான்றாண்மை இவ்வுலகில் தேன்றத் துளிர்த்த தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் ஊன்றிய புகழ்சொல்லிக் கொட்டு முரசே! ஈன்று புறந்தருதல் தாயின்கடன்! உழைத்தல் எல்லார்க்கும் கடனென்று கொட்டுமுரசே! – வாழ்வில் தேன்மழை பெய்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் எங்கணும் பல்குக! பல்குக!- பாவேந்தர் பாரதிதாசன்
நன்று தமிழ் வளர்க! – தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ் வளர்க! – கலை யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் – தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ்மேல் ஆணை! – பாவேந்தர் பாரதிதாசன்
தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை! தமிழகமேல் ஆணை! துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன்; நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும், ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன்! எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்! தமக்கொரு தீமை. என்று நற்றமிழர் எனைஅழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான் இனிதாம் என் ஆவி! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மற…
ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்! – பாவேந்தர் பாரதிதாசன்
எந்நாள்? அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? அந்த வாழ்வுதான் இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்; ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்! புலி, வில், கயல் கொடி மூன்றினால் புது வானமெங்கும் எழில் மேவிடும் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை, பிற மாந்தர்க்கும் உயி ரானதே பெறலான பேறு சிறி தல்லவே! அந்த வாழ்வுதான் எந்தநாள்…
விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில் பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன். மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00 http://wintvindia.com இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
இலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்!
மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்! நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம்….
