கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்
கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள் கொச்சைத் தமிழாகப் பிறந்த மொழிகளில் மிகப் பழமையானவை சுமேரிய, எகிப்து, மொழிகளாகும். பின்னர் வடமொழி, கிரேக்கம், இலத்தீன் என்று சிறப்பான வளம் பெற்ற மொழிகள் தோன்றின. கிரேக்கம், இலத்தீன், வடமொழியாவும் கொச்சைத் தமிழ் என்பதால் அவை மக்கள் வழக்கில் நிற்காமல் மறைந்தன. கொச்சைத் தமிழிலும் மீண்டும் எழுத்து மொழி, பேச்சு மொழி எனப் பல்வேறு மொழிகள் இணைந்தன. அவையே இன்றைய ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், மற்றும் அரபி, உருது, இந்திய மொழிகளாகும். தூய தமிழ் தனித்து…
தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை
தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை மணிப்பிரவாள நடை முதலியவற்றால் தமிழ் ஆரியத்துக்கு முற்பட்ட தென்பது அங்கைக் கனிபோல் விளங்குகின்றது. தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது எனக் கூறுவனயெல்லாம் உண்மை கூற வந்ததன்றி ஆரியத்துக்குக் குறைகூற வந்ததன்று -மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.230.
பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி
பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி இத்துணை யாராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெரு நிலப் பரப்புஇருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையாமென்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க. – மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.5
தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.
தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது. திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல. – கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172
வீர வணக்கப் பேரணி, தை 11, 2046, சென்னை சன.25
இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனாரின் புதிய பார்வை இலக்குவனார் திருவள்ளுவன் தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார். உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ, அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! – பெருஞ்சித்திரனார்
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை
தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார். அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…
தமிழே இலக்குவனாரின் மூச்சு!
தமிழே இலக்குவனாரின் மூச்சு! “பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது. தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க் காவலர். அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே! தமிழே! ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.’’ _ அண்ணலார் பு.அ. சுப்பிரமணியன் – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம்44 தரவு : பாபு கண்ணன்
தமிழ் ஒன்றே உலக முதன்மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்
அநுமன் சீதையிடம் பேசிய மொழி தமிழே!- மா.இராசமாணிக்கனார்
அறிவியல் வாசலில் தமிழ் – கு. செ. சிவபாலன்
அறிவியல் வாசலில் தமிழ் முக நூலில் முகமறியா ஒருவன் கேட்டான் என்ன உண்டு தமிழில் – சொன்னேன் தமிழ் . . . அணுவைத் துளைத்தலை அன்றே சொன்ன அவ்வை மொழி. உலகம் இயங்க உரக்க முழங்கிய வள்ளுவன் வாய் மொழி. உடற் பிணி குறைய , மனக்குறை மறைய சமூகம் பற்றி , சரித்திரம் பற்றி சொல்லாத பொருள் உண்டோ தமிழில் ? வளம் உண்டு. நயம் உண்டு – என்றாலும் அறிவியல் தேடலில் , தேவையில் தேயுமோ தமிழ் மொழி…
