தமிழர் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து,
01.01.2054 / 15.01.2023 தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து அகரமுதல படைப்பாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவிக்கிறோம். இந்து சமயம் உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் பொங்கல் நாளினை இந்து சமய விழா என்பது தவறு. திராவிடம் என்னும் சொல் உருவாவதற்கு முன்னரே கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் நாளினைத் திராவிடத்திருநாள் என்பதும் தவறு. தமிழ்மொழிஇனக் குடும்பத்தினர் பகுதிகளில் தமிழ்மொழிஇனக் குடும்ப விழா என்று கொண்டாடுவோம்! பொங்கல் விழா தமிழர் திருநாளே! உலகெங்கும் உள்ள…
தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
பொங்கல் திருநாள் – திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து!
சாதியும் சமயமும் நாளும் அழிப்பன! அன்பும் அறனும் என்றும் வளர்ப்பன! அறநெறி போற்றுவோம்! அல்லவை போக்குவோம்! தமிழ்நலம் காப்போம்! உயிரினம் மதிப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் இதழுரை அகரமுதல 221 தை 01 – 07, 2049 , சனவரி 14-20,2018
நியூ யார்க்கில் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் பொங்கும் விழா
அன்புடையீர்! வரும் சனவரி மாதம் 14 ஆம்நாள் இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்காவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கமும் இணைந்து தமிழர் திரு நாளான பொங்கல் திரு நாளை புதுயார்க்கு/நியூயார்க்கு அரசி/குயின்சு நகரில் வெகு சிறப்பாகக் கொண்டாட உள்ளன. காலையில் தமிழரின் பண்பாட்டு முறையில் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் பொங்கும் நிகழ்ச்சி அனுமான் ஆலயத்தில் நடை பெறும். மாலையில் நாவலர் தமிழ்ப் பாடசாலை சிறுவர் நிகழ்ச்சிகளுடன் உச்சப்பாடகர்(சூப்பர் சிங்கர்)கள் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி கிளென் ஓக்சு நகரில் உள்ள(…
பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்
ஆண்டுப் பிறப்பில் அறுவடைத் திருவிழா! மாண்புடை மண்ணில் மக்கள் பெருவிழா! கரும்பு மஞ்சள் காய்கறி கிழங்கு விரும்பும் விளைபொருள் எல்லாம் தந்த உழவர் ஆவினம் ஒளிமிகு ஞாயிறு கழனி உழுபடைக் கருவிகள் காளை உயர்வைப் போற்ற ஊரெலாம் கூடி வயலில் வீட்டில் நாட்டில் எங்கும் புத்துயிர் பரவிட பொங்கல் திருநாள் இத்தரை யெங்கும் இன்பமே எனினும் வெற்பினை எறிந்து வீரம் விளைத்த அற்புதத் தாயின் ஆரயிர்த் திருமகன் இற்றை நாளிலும் இந்தியச் சிறையில் இருந்திட இனிக்குமோ இன்சுவைக் கரும்பும்? 00000 ஆரிருள் கவிந்த அழகிய…
