இலக்கியவீதி இனியவன் பவழவிழா, சென்னை
சித்திரை 03, 2048 : 16/4/17 : காலை 10.00 கந்தசாமி( நாயுடு) கல்லூரி, அண்ணாநகர், சென்னை இலக்கிய ஆர்வலர் அனைவரும் வருக! அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
சிலப்பதிகாரப் பெருவிழா 2017
(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.) “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணீயாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் போற்றிய சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் “இளங்கோ விருது”வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும். 2014-இல் சென்னையிலும் 2015-இல் நாமக்கல்லிலும் சிலப்பதிகார மாநாடுகள் நடைபெற்றன. 2016 & 2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருதுகளும் இளைய சிலம்பொலி விருதுகளும்…
சிலப்பதிகாரப் பெருவிழா, சென்னை
அன்புடையீர், வணக்கம். மாசி 15, 2048 / திங்கட்கிழமை / 27-02-2017 காலை 10 மணி முதல் மதியம் 1. 30 மணிவரை, முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை- அறிவியல் கல்லூரி அரங்கில், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை – முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை -அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் சிலப்பதிகாரப் பெருவிழா நடைபெறவுள்ளது. நீதியரசர் வள்ளிநாயகம், நயவுரைநம்பி முனைவர் செகத்துரட்சகன், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பமை திருச்சி சிவா,பழனி சி. பெரியசாமி, தாளாளர் திருமதி இலதா இராசேந்திரன், கவிப்பேரருவி…
மணவை முத்தபா நினைவேந்தல், சென்னை
நாள்: மாசி 06, 2048 / சனிக்கிழமை / 18 . 02. 2017 நேரம்: மாலை 5.30 – 7.30 வரை இடம்: இந்திய அலுவலர் சங்கக் கட்டடம் 69, திரு.வி.க. நெடுஞ்சாலை இராயப்பேட்டை , சென்னை – 600014 மணவை முத்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை தமிழகப்புலவர் குழு தமிழ்மொழி அகாதெமி அண்ணாநகர் இசுலாமிய நடுவம் அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம் அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : மரு. திருமதி. மணிமேகலை கண்ணன் தொடர்பு எண்கள் : 9841036222…
பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர் வழங்கினார்.
பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர் வழங்கினார். தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விழா சென்னையில், தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதுபோழ்து, தமிழ்த்தென்றல் திருவிக விருதினைப் பேரா.மறைமலை இலக்குவனார்க்கு முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். [படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.]
திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள்
தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017 சென்னை திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள் முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார். விருதுகளும் விருதாளர்களும் திருவள்ளுவர் விருது – புலவர் வீரமணி பெரியார் விருது – பண்ருட்டி இராமச்சந்திரன் அம்பேத்கர் விருது – மருத்துவர் துரைசாமி அண்ணா விருது – கவிஞர் கூரம் துரை காமராசர் விருது – நீலகண்டன் பாரதியார் விருது – பேராசிரியர் கணபதிராமன் பாரதிதாசன் விருது – கவிஞர் பாரதி திரு.வி.க….
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி) “போக்குவரத்து வசதி குறைந்திருந்த அந்நாட்களில் படிப்பறிவுற்றோர் குறைந்திருந்த மன்பதைச் சூழலில் கல்லூரிப் பணியாற்றியதே போதும் என நிறைவடைந்துவிடாமல் ஊர் ஊராகச் சென்று சங்க இலக்கியச் சொற்பொழிவு ஆற்றிய இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு தன்னிகரற்றது. சொற்பொழிவாற்றினார் எனக் கூறுவதைக் காட்டிலும் தமிழ்மொழி, தமிழின மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார் என்றே கூறவேண்டும்.” (பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் மொழிப்போர் தந்தை – ஓர் ஆய்வு : பக்கம்23-24) …
உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை – மறைமலை இலக்குவனார் அணிந்துரை
உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை – அணிந்துரை வெல்க தமிழ்! பாவலர் வேணு.குணசேகரன் அவர்கள் இயற்றிய ‘திருத்தமிழ்ப்பாவை’ உங்கள் கைகளில் தவழ்கிறது. திருமாலைத் தொழுது ஏத்தும் இறைபடியார்க்குத் ‘திருப்பாவை’ எத்துணைச் சிறப்பு வாய்ந்ததோ, சிவபெருமானை வழுத்தும் இறையன்பர்க்குத் ‘திருவெம்பாவை’ எவ்வளவு சிறப்பு மிக்கதோ, அவ்வளவு சிறப்பும் சீர்மையும் கொண்டதாகத் தமிழன்பர் அனைவரும் கொண்டாட வேண்டிய நூல் இந்தத் ’திருத்தமிழ்ப்பாவை’ என்பதனை இந்நூல் கற்று முடிந்தவுடன் நீங்கள் உணர்வீர்கள். இன்றைய காலச்சூழல் ஒரு விந்தையான சூழல் என்பதனைத்…
திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா
சென்னை, கலைவாணர் அரங்கில், தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017 காலை 10:30 மணிக்கு நடைபெறும். முன்னதாகக் காலை 9.00மணி முதல் கலைநிகழ்ச்சி நடைபெறும். சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், வெளியிடப்பட்டது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விருது பெறுவோர் பெயரை, முதல்வர் பன்னீர்செல்வம்,…
மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்
மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார் மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார் தமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16,2047/1.12.2016) இயற்கையோடு கலந்தார். உடல்நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நோயிலிருந்து மீளாமல் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. …
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் இன்குலாபு நினைவரங்கம், சென்னை
கார்த்திகை 28, 2047 / திசம்பர் 13, 2016 மாலை 6.00 மறைமலை இலக்குவனார் ஈரோடு தமிழன்பன் ,இளவேனில், அறிவுமதி
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி இவ்வரிகள் இலக்குவனாரின் தொலைநோக்கைக் காட்டுவதாக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சி.இலக்குவனார் குறித்து எழுதியுள்ள நூலில்(பக்கம் 50) பேராசிரியர் முனைவர் இ.மறைமலை பின்வருமாறு கூறுகிறார்: “வறியோர்க்கு உணவு, முதியோர்க்கு உணவு, கோயிலில் உணவு என்று பல்வேறு இலவச உணவுத் திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இவை யனைத்தும் பெரும் நிதியையும் கரைக்கும் செலவினங்களாகவே அமைந்துள்ளன. ஆனால், இலக்குவனார் கனவு காணும்…