திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா

 சென்னை, கலைவாணர் அரங்கில்,  தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 காலை 10:30 மணிக்கு நடைபெறும்.  முன்னதாகக் காலை 9.00மணி முதல் கலைநிகழ்ச்சி நடைபெறும்.   சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், வெளியிடப்பட்டது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்த ஆண்டு விருது பெறுவோர் பெயரை, முதல்வர் பன்னீர்செல்வம்,…

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார் மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்  தமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16,2047/1.12.2016) இயற்கையோடு கலந்தார்.  உடல்நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நோயிலிருந்து மீளாமல் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.  …

புரட்சியில் பூத்த மலர் இலக்குவனார் – க.இந்திரசித்து

புரட்சியில் பூத்த மலர்  – க.இந்திரசித்து   பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, இலெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும்…

சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!

சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!   உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் புரட்டாசி 15, 2047 / 01-10-2016 சனிக்கிழமை , மாலை 5 மணி   உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது. தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம்,  பண்பாடு போன்றவற்றை மேம்படுத்திப் பாதுகாப்பது. அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள். உலகளவில் நிகழக் கூடிய மனித நேயச் செயல்பாடுகளில் இணைந்து கொள்வது. சிறப்பு அழைப்பாளர்கள்: மேலை நாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தவர்கள்:…

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார்

(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3  தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3   1933-ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரிப் புலவர் மாணாக்கராக இருந்தபோதே ‘எழிலரசி’என்னும் குறுங்காப்பியத்தை இயற்றி வெளியிட்டார் இலக்குவனார். 1930களில் புரட்சிக்கவிஞர் படைத்த கவிதைகளிலும் குறுங்காப்பியங்களிலும் வடமொழியின் வாடை தூக்கலாக இருந்தது. ஆனால் இலக்குவனாரின் “கதைபொதி பாட்டு” முற்றும் தனித்தமிழாலேயே இயன்றது.   1936-இல் தஞ்சை நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியேற்ற இலக்குவனார் தாம் பணியாற்றிய பள்ளிகளிலெல்லாம் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோவடிகள் விழா, ஔவையார்…

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 – மறைமலை இலக்குவனார்

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3  இயல்பாகத் தமிழுக்கு முதன்மையும் பெருமையும் வழங்கிப் போற்றிவந்த தமிழர் வேற்றவர் மொழியும் பண்பாடும் அறிமுகமான பொழுதில் தமிழின் தனித்தன்மையும் மேலாண்மையும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது என எழுச்சியுடன் இயங்கிய செயல்முறையே தமிழியக்கம் என வரையறை அளிக்கலாமல்லவா? சமணர் நுழைவும் அர்த்தமாகதி, சௌரசேனி முதலான பிராகிருதங்களின் அறிமுகமும் ஏற்பட்டவேளையில் வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே என்று விதி வகுத்த தொல்காப்பியரே முதல் தமிழியக்கப் போராளி. சமற்கிருதத்தின் தோற்றத்திற்கு முன்னமேயே வகுக்கப்பெற்ற இந்த விதி பின்னாளில் சமற்கிருதம் தமிழருக்கு…

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்! – மறைமலை இலக்குவனார்

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்!   வடக்கே ஆயிரம் மொழிகள் இருந்தாலும் வடமொழி என்னும் சொல் சமசுகிருதத்தையும் தெற்கே ஆயிரம் மொழிகள் நிலவினாலும் தென்மொழி என்பது தமிழையும் தொன்றுதொட்டுக் குறித்து வருகின்றன. தென்மொழியாகிய தமிழ், இன்றைய இந்தியாவின் தெற்குப்பகுதி முழுமையையும், இன்னும் கூடுதலாக, இன்றைய குமரிக்குத் தெற்கே நிலவிய நிலப்பகுதியையும் சேர்த்துத் தன் ஆளுகையில் கொண்டிருந்தது. தென்மொழி இயற்கையான மொழி. அக்காலத் தமிழரின் அறிவுவளர்ச்சியாலும், சிந்தனை முதிர்ச்சியாலும் இலக்கிய வளமும், இலக்கணச் செப்பமும் கொண்டு சிறந்தமொழி. வடமொழி செயற்கையான மொழி. வடநாட்டில் நிலவிய பிராகிருத மொழிகளின்…

தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம், சென்னை 600001

  ஒய்எம்சிஏ பட்டிமன்றம் (கி.இ.க.பட்டிமன்றம்) ஆடி 25, 2047 / ஆக.09,2016 மாலை 6.00 மறைமலை இலக்குவனார் பூங்குழலி பெருமாள் ஆய்விற்குரிய  பாவியங்கள் : 1.வெற்றிச்செல்வி 2.அண்ணல் பாடல்தொகுப்பு 3.தமிழமல்லன் பாக்கள் 4.பாமுகில் 5.மல்லன்பாக்கள் 6.பாச்சோலை 7.முழக்கம்

திருக்குறள் விக்கி – குறள் நிகழ்வு ஒருங்கிணைப்புத் தளம்

உலகெங்கும் இயங்கும் திருக்குறள் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்” குறள் பரப்பும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்குடனே திருக்குறள் விக்கி தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் நடத்தும் கூட்ட நிகழ்ச்சிகளை எம்பி4  வடிவத்தில் அனுப்புங்கள். காணொளி நறுக்குகளாகப் பதிவேற்றம் செய்யலாம். பத்துப் பத்து மணித்துளிகள் கொண்ட பதிவுகளாக அமைக்கவேண்டும். அப்போதுதான் அலுப்பு தட்டாமல் கேட்கலாம். உங்கள் ஊரில் இருபதுபேர் கூடிய கூட்டமாக இருப்பினும் வலைத்தளம் மூலம் ஆறு கோடித் தமிழரும் கேட்கும்படிச் செய்யலாம் அல்லவா?  வான்புகழ் வள்ளுவம் மானிடம் தழைக்க வாய்த்த மாமருந்து.இன்றைய சூழலில் உலகம் முழுமையும் அமைதி நிலைத்திட அல்லல் தொலைந்திட…

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்   சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 ஞாயிறு காலை 10.00 மணி இடம் எண் 14/ டி(D) தொகுப்பு, இரண்டாவது நிழற்சாலை விரிவு, கிறித்துவத்திருக்கோயில் அருகில், (பொதுநுகர் பொருள் விற்பனைக்கடை எதிரில்) அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102 நினைவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் த.சுந்தரராசன், செயலர், அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கம் மறைமலை இலக்குவனார்,  செயலர், தமிழகப்புலவர் குழு, சென்னை 600 101