இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 5 – மறைமலை இலக்குவனார்

  பேராசிரியர் இலக்குவனார் காலத்தில் கிடைத்த சான்றுகளைக் காட்டிலும் மிகுதியான சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன.  சிந்துவெளி எழுத்துகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மண்பாண்டச் சில்லுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி தமிழர்கள் வந்தேறிகள் அல்லர் என்பதை வலியுறுத்துகின்றன. நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதிய கற்காலக் கற்கோடரியில் தமிழ் எழுத்துகள் காணப்படுவதாகக் கிடைத்த செய்தி தமிழ் எழுத்துகளின் தொன்மையையும் பழந்தமிழரின் கல்வியறிவையும் பாருக்குப் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.   புதிய கற்காலத்திலேயே தமிழர்க்குத் தனித்த எழுத்துமுறை இருந்தது என்னும் செய்தி இந்தியாவில் தொன்மைவாய்ந்த எழுத்துமுறை தமிழருடையதே…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 4 – மறைமலை இலக்குவனார்

(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி)     எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.   தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’, ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது?…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 2 – மறைமலை இலக்குவனார்

(அகரமுதல 19.07.15 தொடர்ச்சி) 2   தொல்காப்பியர்காலத்தமிழுக்கும் திருவள்ளுவர்காலத்தமிழுக்கும் இடையே நிலவிய சில வேற்றுமைகளைப் பட்டியலிடுகிறார் (மே.ப. ப.139-140).  ‘அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிலது.  விகுதிகள், உருபுகள், இடைநிலைகள், சொற்கள் புதியனவாகத் தோன்றியுள்ளன.  பழையன புதிய பொருள்கள் பெற்றுள்ளன’ என்று இவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துரைத்து, இவ்விருவர் கால இடைவேளை ஆறு நூற்றாண்டுகள் என்பதையும் சுட்டி ‘ஆறு நூற்றாண்டுகட்குள் மேலைநாட்டு மொழிகளில் பல அடைந்துள்ள மாற்றங்களோடு தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்மொழி மாற்றமே அடையவில்லை என்று கூறிவிடலாம்’ (மே.ப. ப.139-140) என அறுதியிட்டுரைக்கிறார்….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 – மறைமலை இலக்குவனார்

செந்தமிழின் செம்மொழிச்சீர்மையை விளக்கும் இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல்   செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும்.  என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின் இலக்கியப்பழமையே அதனைச் செம்மொழியாகப் போற்றுதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறுவதுடன் சங்க இலக்கியங்களின் செழுமையையும் அவர் விரிவாக விளக்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்குவது குறித்த ஆய்வு தேவையற்றது என்கிறார்.   தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்கவேண்டும் என்று…

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 1: மறைமலை இலக்குவனார்

1 கட்டுரையின் நோக்கம்:   கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர்.   வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச் செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும் ஒலிகளின் மாறுபாடுகளை வகைப்படுத்தியறிந்து ஊறு நேர வாய்ப்புள்ள வழிகளைத் தவிர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். இனிய ஓசைகளைச் செவியாரத் துய்த்தும் இன்னா ஓசைகளை இனங்கண்டு பிறர்க்குரைத்தும் ஒலிகளை ஒப்புநோக்கிக் கூறியும் தம்மைச் சூழ்ந்திருந்த ஒலிச்சூழலமைவை அவர்கள் ஆய்ந்துரைத்த திறம்…

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது  பிறந்தநாள் பெருமங்கல விழா அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடக்க விழா ஒன்பான் அறிஞர்களுக்கு அறக்கட்டளை விருது வழங்கல் மணவை முசுதபா வாழ்க்கைக் குறிப்பேடு வெளியீடு விருதாளர்களைப் பற்றிய குறிப்பேடு வெளியீடு அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள்  பெருமங்கல விழா  இன்று(ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை) சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் நடைபெற்றது. கலைமிகு மீனாட்சி குழுவினர் தமிழிசைப்…

‘தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு’ – ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

  ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்  என்னும் அமைப்பு அறுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ. என்னும் உலகளாவிய அமைப்பின்.சென்னைக் கிளையின் இலக்கியப்பிரிவாக உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்தஒய்.எம்.சி.ஏ. கட்ட்டத்தின் முதல் மாடியில் செவ்வாய் தோறும் இங்கே பல துறைகளில் அறிவார்ந்த பொழிவுகள் பல்துறை வித்தகர்களால் நிகழ்த்தப்பெற்று வருகின்றன.   மே திங்களைத் தவிர ஏனைய அனைத்துத் திங்களிலும் செவ்வாய் தோறும் இக் கூட்டங்கள் கருத்துவிருந்து வழங்கி வருகின்றன. வெளியூரிலிருந்து வருபவர்கள்கூடச் செவ்வாய்க்கிழமை பாரிமுனைப் [பகுதிக்கு வந்து விட்டால் இங்கே வந்து பயனடைந்து செல்வது…