ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்
ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும்!
உலகம் நல்லின்பம் பெற ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும். ஆட்சிமுறை செம்மையுற ஆளுவோர் உளம் நற்பண்பு அடைதல் வேண்டும். ஆட்சிமுறை எவ்வளவு சிறந்ததாய் இருப்பினும் ஆளுவோர் உளநிலை பண்பட்டிலதேல் பயனற்றுவிடும். ஆதலின் ஆட்சித்துறையில் அமர்வோர் உளம் செம்மையுற வேண்டும். அவர் மனநலத்தால் அவர் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களே நன்மை பெறுவர். உலகில் உள்ள பல நாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புற்றுச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளன. ஒரு நாட்டின் இன்பதுன்பம் பிறநாடுகளையும் சார்கின்றன. செர்மானியில் போர் தோன்றினால் சப்பானில் அதன் பயனைக் காணலாம். பிரான்சில் உள்நாட்டுக்கலகம் தோன்றின் இங்கிலாந்தில் அதன் எதிர் விளைவை அறியலாம். ஆதலின், ஆட்சி புரிவோர் நற்பண்பு மிக்க உளம் உடையோராய் நாட்டை ஆண்டால் உலகத்திற்கே நன்மையென்றார்.
பேராசிரியர் சி.இலக்குவனார்:
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 744
Leave a Reply