ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்

ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும்!      உலகம் நல்லின்பம் பெற ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும். ஆட்சிமுறை செம்மையுற ஆளுவோர் உளம் நற்பண்பு அடைதல் வேண்டும். ஆட்சிமுறை எவ்வளவு சிறந்ததாய் இருப்பினும் ஆளுவோர் உளநிலை பண்பட்டிலதேல் பயனற்றுவிடும். ஆதலின் ஆட்சித்துறையில் அமர்வோர் உளம் செம்மையுற வேண்டும். அவர் மனநலத்தால் அவர் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களே நன்மை பெறுவர். உலகில் உள்ள பல நாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புற்றுச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளன. ஒரு நாட்டின் இன்பதுன்பம் பிறநாடுகளையும் சார்கின்றன….

எப்படி வளரும் தமிழ்? 2/3 : கவிஞர் முடியரசன்

(எப்படி வளரும் தமிழ்? 1/3  தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்?  2/3 கல்வித் துறையில்   இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம்…