(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1231-1240) தொடர்ச்சி)

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

திருவள்ளுவர்

திருக்குறள்

காமத்துப்பால்

125. நெஞ்சொடு கிளத்தல்

(பிரிவாற்றாமையால் நெஞ்சிடம் புலம்பல்)

161. பிரிவு நோய்க்கு மருந்து சொல், நெஞ்சே! (1241)

162. அன்பில்லாதவரிடம் அன்பைக் காட்டுகிறாயே அறிவிலி நெஞ்சே! (1242)

163. வருந்தும் நோயைத் தந்தவருக்காக வருந்திப் பயனென்ன? (1243)

164. நெஞ்சே! அவரைக் காணச் செல்லும்போது கண்களையும் அழைத்துச் செல்! (1244)

165. வெறுத்தார் என்று வெறுக்க இயலுமோ (1245)

166. பொய்க்கோபம் கொள்ளும் நெஞ்சே! உனக்கேன் ஊடல்? (1246)

167. காதல் விருப்பம், நாணம் இரண்டில் ஒன்றை விடு நெஞ்சே! (1247)

168. பிரிந்தவர் பின் செல்கிறாயே பேதை நெஞ்சே! (1248)

169. நெஞ்சே! உன் உள்ளத்தில் உள்ள காதலரைத் தேடி யாரிடம் செல்கிறாய்?(1249)

170. நீங்கியவரை நெஞ்சத்தில் கொண்டு அழகை இழக்கிறோமே! (1250)

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)