(அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் தொடர்ச்சி)

arangarasan_thirukkural_arusolurai_attai

01. அறத்துப் பால்

02. இல்லற இயல்

 அதிகாரம் 012. நடுவு நிலைமை

 

  யாருடைய பக்கமும் சாயாமல்,

   நேர்மையாக நடக்கும் சமநிலை.

 

  1. தகுதி எனஒன்று நன்றே, பகுதியால்,

   பால்பட்[டு] ஒழுகப் பெறின்.

 

          அவ்அப் பகுதியார்க்கு ஏற்ப

          நடக்கும் தகுதியே நடுநிலைமை.

 

  1. செப்பம் உடையவன் ஆக்கம், சிதை(வு)இன்றி,

    எச்சதிற்(கு) ஏமாப்(பு) உடைத்து.

 

       நடுநிலையார் வளநலம் வழிவழி

       வருவார்க்கும், பாதுகாப்பு ஆம்.

 

  1. நன்றே தரினும், நடு(வு)இகந்(து)ஆம் ஆக்கத்தை,

   அன்றே ஒழிய விடல்.

 

        நடுநிலை தவறவரும் வளர்ச்சி

       நன்றாயினும் அன்றே கைவிடுக.

 

  1. தக்கார், தக(வு)இலர், என்ப(து), அவர்அவர்

     எச்சத்தால் காணப் படும்.

 

       தகுதியார், தகுதிஇலார் என்பதைப்

       புகழால், பழியால் ஆய்க.

 

  1. கேடும், பெருக்கமும், இல்அல்ல; நெஞ்சத்துக்

     கோடாமை, சான்றோர்க்(கு) அணி.

 

       வறுமையோ, வளமையோ, என்றும்

       நடுநிலையே, உயர்ந்தோர்க்கு அழகு.

 

 

 

  1. “கெடுவல்யான்” என்ப(து) அறிக,தன் நெஞ்சம்

   நடுஒரீஇ, அல்ல செயின்.

 

       நடுநிலைமை தவறிக் கெடுதி

       செய்தால், “கெடுவேன்”என நினை.

 

  1. கெடுஆக வையா(து) உலகம், நடுஆக,

   நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

 

       நடுநிலையார் தாழ்வைக், கெடுதிஎன,

       உயர்ந்தார் என்றும் கருதார்.

 

  1. சமன்செய்து, சீர்தூக்கும் கோல்போல், அமைந்(து),ஒருபால்

    கோடாமை, சான்றோர்க்(கு) அணி.

 

       தராசு முள்போல், மனம்சாயா

       நடுநிலையே, மேலோர்க்கு அழகு.

 

  1. சொல்கோட்டம் இல்லது செப்பம், ஒருதலைஆ,

   உள்கோட்டம் இன்மை பெறின்.

 

       உள்கோணல், சொல்கோணல், இல்லாமையே,

        உறுதிமிகு நடுநிலைப் பேணல்.   

 

  1. வாணிகம் செய்வார்க்கு, வாணிகம் பேணிப்,

     பிறவும், தமபோல் செயின்.

 

         “பிறரது பொருளும், தம்பொருளும்

         சமம்”எனச் செய்தலே வாணிகம்

– பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 013. அடக்கம் உடைமை)