(001. இறைமை வழிபாடு தொடர்ச்சி)

arangarasan_thirukkural_arusolurai_attai

001 அறத்துப் பால்       

01 பாயிர இயல்

002. வான்சிறப்பு

உலகையே வாழ்விக்கும் அமிழ்தமாம்

     மழையின், பயன்களும் சிறப்புக்களும்.

  1. வான்நின்(று), உலகம் வழங்கி வருதலான்,

தான்அமிழ்தம் என்(று),உணரல் பாற்று.

     உலகையே நிலைக்கச் செய்வதால்,

       மழைநீர்தான், அமிழ்தம்; உணர்க.

  1. துப்பார்க்குத், துப்(பு)ஆய, துப்(பு)ஆக்கித், துப்பார்க்குத்,

துப்(பு)ஆய தூஉம், மழை.

  உண்பார்க்கு உணவை ஆக்குவதும்,

         உணவாக ஆவதும் மழைதான்.

  1. விண்நின்று பொய்ப்பின், விரிநீர் வியன்உலகத்(து),

உள்நின்(று) உடற்றும் பசி.

   மழைப்பொய்ப்பு நிலைத்தால், உலகத்து

       உயிர்களைக், கடும்பசி வாட்டும்.

  1. ஏரின் உழாஅர் உழவர், புயல்என்னும்,

வாரி வளம்குன்றிக் கால்.

மழைஎனும் நிறைவளம் குறைந்தால்,

   உழவர் உழவினைச் செய்யார்.

  1. கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய்,மற்(று) ஆங்கே,

எடுப்பதூஉம், எல்லாம் மழை.

   கெடுப்பதும், கெட்டார்க்குக் கொடுப்பதும்,

       அடுத்துப் பெய்யும் மழைதான்.

  1. விசும்பின் துளிவீழின் அல்லால்,மற்(று) ஆங்கே,

பசும்புல் தலைகாண்(பு) அரிது.

   நல்மழைத் துளிகள் விழாவிட்டால்,

       புல்நுனியையும், காண முடியாது.

  1. நெடும்கடலும், தன்நீர்மை குன்றும், தடிந்(து)எழிலி,

தான்நல்கா(து) ஆகி விடின்.

     கருமுகில் மழையைத் தராவிட்டால்,

       பெருங்கடலும், தன்இயல்பில் குறையும்.

  1. சிறப்பொடு பூசனை செல்லாது, வானம்

வறக்குமேல், வானோர்க்கும் ஈண்டு.

     வானம் வறண்டால், தேவர்க்கும்,

       வழிபாடுகள், திருவிழாக்கள் நடவா.

  1. தானம்,தவம், இரண்டும் தங்கா, வியன்உலகம்,

வானம் வழங்கா(து) எனின்.

   வானம் மழையை வழங்காவிடின்,

   தானமும், தவமும் நிகழா.

  1. நீர்இன்(று), அமையா(து) உல(கு)எனின், யார்யார்க்கும்,

வான்இன்(று), அமையா(து) ஒழுக்கு.

   நீர்இல்லாமல், உலகமும், மழைஇல்லாமல்,

       யார்க்கும் ஒழுக்கமும் அமையா. 

– பேராசிரியர்வெ. அரங்கராசன்

(காண்க : அதிகாரம் 003. நீத்தார் பெருமை)