(அதிகாரம் 038. ஊழ் தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

02.பொருள் பால்   

05. அரசு இயல் 

அதிகாரம்  039. இறை மாட்சி

 

ஆள்வோரிடம் அமைய வேண்டிய,

 பேரறிவுத்   திறனும்,  பெரும்பண்புகளும்.

 

  1. படை,குடி, கூழ்,அமைச்சு, நட்(பு),அரண், ஆறும்

      உடையான், அரசருள் ஏறு.

 

    படை,மக்கள், உணவு,அமைச்சு, நட்பு,அரண்

        உடையான், நல்ல ஆட்சியான்.

 

  1. அஞ்சாமை, ஈகை, அறி(வு),ஊக்கம், இந்நான்கும்

      எஞ்சாமை, வேர்ந்தர்க்(கு) இயல்பு.

 

     அஞ்சாமை, கொடைமை, அறிவு,

        ஊக்கம், ஆட்சியரது இலக்கணம்.

 

  1. தூங்காமை, கல்வி, துணி(வு)உடைமை, இம்மூன்றும்,

      நீங்கா, நிலன்ஆள் பவர்க்கு.

 

     காலம் தாழ்த்தாமை, கல்விஅறிவு,

        துணிவு, ஆட்சியர்க்குத் தேவை.

       .

  1. அறன்இழுக்கா(து), அல்லவை நீக்கி, மறன்இழுக்கா

      மானம், உடைய(து) அரசு.

 

     அறம்தவறாது, தீயவை நீக்கிய,

        வீரமான மானத்தானே ஆள்வான்.

 

  1. இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த

      வகுத்தலும், வல்ல(து), அரசு.

 

     திட்டமிட்டுப், பொருள்திரட்டிக், காத்துப்,

        பகுத்துக் கொடுப்பதே நல்அரசு.

 

  1. காட்சிக்(கு) எளியன், கடும்சொல்லன் அல்லனேல்,

     மீக்கூறும் மன்னன் நிலம்.

 

     எளியார், கடும்சொல் சொல்லார்

       புகழுக்கு உரிய, ஆட்சியார்.

 

  1. இன்சொல்லால், ஈத்(து)அளிக்க வல்லாற்குத், தன்சொல்லால்,

       தான்கண்(டு) அனைத்(து), இவ் உலகு.   

 

      இன்சொல்லோடு, கொடையிலும் வல்லான்தன்

        சொல்லைத்தான் மக்களும் கேட்பார்.

 

  1. முறைசெய்து, காப்பாற்றும் மன்னவன், மக்கட்(கு),

      இறைஎன்று, வைக்கப் படும்.

 

      முறையோடு காப்பாற்றும் ஆட்சியான்

        குடிகளுக்குத் தலைவன் ஆவான்.

 

  1. செவிகைப்பச், சொல்பொறுக்கும், பண்(பு)உடை வேந்தன்

      கவிகைக்கீழ், தங்கும் உலகு.

 

     அருங்கசப்புத் திறனாய்வையும் கேட்டுத்

        திருந்தும் ஆள்வோனே பண்பாளன்.

 

  1. கொடை,அளி, செங்கோல், குடிஓம்பல், நான்கும்

      உடையான்ஆம், வேந்தர்க்(கு) ஒளி.

 

      கொடையோடு ,இரக்கம், நல்ஆட்சி,

        குடிகாத்தல் திறத்தான், புகழ்ஆட்சியான்.