(அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை தொடர்ச்சி)attai_kuralarusolurai

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 058. கண்ணோட்டம் 

உயிர்கள்மீது கண்களின் ஓட்டம்,

அதனால் விளையும் இரக்கம்.

 

  1. கண்ணோட்டம் என்னும், கழிபெரும் காரிகை,

      உண்மையான், உண்(டு),இவ் உலகு.

 

      இரக்கம் என்னும், பேரழகுப்

        பண்பால்தான், உலகம் இருக்கிறது.

0572, கண்ணோட்டத்(து) உள்ள(து), உல(கு)இயல்; அஃ(து),இன்றேல்,

      உண்மை நிலக்குப் பொறை.

 

      இரக்கத்தால் உலகுஇயல் உண்டு;

        இரக்கம்இலான் பூமிக்குச் சுமை.

.

  1. பண்என்ஆம்? பாடற்(கு) இயை(பு)இன்றேல்; கண்என்ஆம்?

      கண்ணோட்டம் இல்லாத கண்.

 

      பாட்டோடு பொருந்தாத இசையால்,

        இரங்காத கண்களால், பயன்என்?

 

  1. உளபோல், முகத்(து)எவன் செய்யும்? அளவினால்,

     கண்ணோட்டம் இல்லாத கண்.

 

     இரங்காத கண்கள் முகத்தில்,

       இருப்பதால் என்ன பயன்?

 

  1. கண்ணிற்(கு) அணிகலம், கண்ணோட்டம்; அஃ(து)இன்றேல்,

     புண்என்(று), உணரப் படும்.

 

      இரக்கம் என்னும் நகைகள்

        அணியாத கண்கள், புண்கள்.

 

  1. மண்ணோ(டு) இயைந்த மரத்(து)அனையர், கண்ணோ(டு)

      இயைந்து,கண் ணோடா தவர்.

 

      கண்பொருந்தியும், இரக்கம் பொருந்தார்,

        மண்பொருந்திய மரமே போல்வார்.

 

  1. கண்ணோட்டம் இல்லவர், கண்ணிலர்; கண்உடையார்,

      கண்ணோட்டம் இன்மையும், இல்.

 

    இரக்கம்இல்லார், கண்கள் இல்லார்;

       இரக்கம்உள்ளார் கண்கள் உள்ளார்,

       .

  1. கருமம் சிதையாமல், கண்ணோட வல்லார்(கு),

     உரிமை உடைத்(து),இவ் உலகு.

 

 கடமை சிதையாமல், இரங்க

       வல்லார்க்கு, உலகம் உரிமைஆம்.

 

  1. ஒறுத்(து)ஆற்றும் பண்பினார் கண்ணும்,கண் ணோடிப்,

     பொறுத்(து)ஆற்றும் பண்பே, தலை.

 

     தண்டிப்பார்க்கும் இரக்கம் காட்டிப்

       பொறுப்பதே தலைமைப் பண்பு.

 

  1. பெயக்கண்டும், நஞ்(சு)உண்(டு), அமைவர், நயத்தக்க,

      நாகரிகம் வேண்டு பவர்.

 

      நஞ்சுஇடக் கண்டாலும், நாகரிகர்,

        அந்நஞ்சையும் உண்டு அமைவர்.

(அதிகாரம் 059. ஒற்று ஆடல்)

-பேராசிரியர் வெ. அரங்கராசன்