திருக்குறள் இளமையும் புதுமையும் உள்ள நூல் – நாமக்கல் கவிஞர்
திருக்குறள் என்றென்றும் அழியாத இளமையும் புதுமையும் உள்ள நூல்
உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லாதிருக்கும். அதுமட்டுமின்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள ஒருநூல் வேறு எந்த மொழியிலும் இல்லையென்று உலகத்தின் பேரறிஞர்கள் எல்லோரும் ஒருமுகமாகப் போற்றுகின்றார்கள் என்பது திருவள்ளுவர் தமிழ் மக்களுக்கு வைத்துச் சென்ற அழியாத செல்வம்.
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்
Leave a Reply