பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16.20 தொடர்ச்சி)
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25
- நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக்
கல்லார் அடையார் களிப்பு.
- அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும்
பண்பும் குறளால் பெறு.
23. வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர்.
உள்ளுவர் நல்வினை ஓர்ந்து.
24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர்.
துன்பம் தவிர்த்துவாழ் வார்.
25. வையத்து வாழ்வாங்கு வாழ்ந்திடக் கற்றிடுவோம்
தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து.
தி.வே.விசயலட்சுமி
பேசி – 98415 93517
அருமையான பதிவு. எனினும் சில இடங்களில் வெண்பா இலக்கணம் பிறழ்ந்து காணப்படுகிறது.
தளைப்பிறழ்ச்சி காணப்படும் இடங்கள்
(8) தீங்குறளே/ சிறப்பு
(9) திறம்படப்/ பெறுவோம்/ தேர்ந்து
(11) வளமும்/ என்றும்
(12) ஆய்வோரைத்/ திசையெலாம்
(13) இன்குறள்/ இருளற, ஓதுவோம்/ இனிது
(14) பாநயத்தை/ மகிழ்ந்து
(22) அறிவும்/ ஆக்கமும்
(24) குறள்கற்பவர் – புளிமாங்கனி வாய்ப்பாடு – வெண்பாவில் வாரா
இவையாவும் இந்த சிறியேனின் தாழ்மையான கருத்துக்கள். தவறு இருப்பின் மன்னிக்கவும்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.