வள்ளுவர் சொல்லமுதம் -6 : அன்பும் அறமும் : அ. க. நவநீத கிருட்டிணன்
(வள்ளுவர் சொல்லமுதம் -5 : அ. க. நவநீத கிருட்டிணன் : கல்வியும் கேள்வியும்- தொடர்ச்சி)
வள்ளுவர் சொல்லமுதம்
ரு. அன்பும் அறமும்
அன்பு, அனைவர்க்கும் அமைய வேண் டிய உயர்ந்த பண்பு. மக்கள் வாழ்வுக்கு அடிப்படையான பண்பும் அன்பே. இவ் அன்பென்னும் அடிப்படை யின் மேலேதான் அறமாளிகை நிறுவப்பட வேண்டும். ஆதலின், மக்கள் அறவாழ்வை வகுத்துச் சொல்லத்தொடங்கிய வள்ளுவர் பெருமான் முதலில் அன்பையே மொழிந்தருளினர்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
என்பது தெய்வப் புலவர் திருவாக்கு. இல்லற வாழ்வுக்கு அன்பு பண்பாக அமையவேண்டும்; அறம் பயனாக அமையவேண்டும். மனைவியும் மக்களும் முதலாய தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் காதலே அன்பு என்பர் பரிமேலழகர்.
இவ் அன்பை அறிவது எங்ஙனம்? அன்பர்கள் துன்புறுங்காலத்து, அவர்பால் அன்புசெய்த நண்பர்தம் கண்ணில் சிந்தும் சிறுகண்ணிரே அவரது உள்ளன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்தும். ஆதலின் அன் ைப அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? என்று கேட்பார் நம் முதற்பாவலர் அன்பு நெறியில் செல்லும் உடம்பையே உயிர் நின்ற உடம்பு என்னலாம். அன்பிலார்க்கு உள்ள உடம்பு எலும்புகளைத் தோலால் போர்த்துவைத்த வெற்றுடம்பே. உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை, பாலை நிலத்தில் பட்ட மரம் தளிர்த்தாற் போலும். எலும்பு இல்லாத உடம்பையுடைய புழுவைக் கதிரவன் வெப்பம் காய்ந்து வருத்துவது போல, அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும். இம்மையிலும் மறுமையிலும் இன்ப வாழ்க்கைக்கு அடிகோலுவது அன்பே. உற்ற இடத்து உயிர் வழங்கும் உத்தம நட்பாளரைப் பெறுதற்கும் இவ் அன்பே உறுதுணையாக அமையும். அன்பிலாதவர் ஒன்றானும் பிறர்க்கு உதவ மாட்டார். எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர். அன்புடையார் அனைத்தையும் பிறர்க்கே உரிமையாக்கிப் பெருமையுடன் வாழ்வர். அன்பே உருவாய்த் திகழ்ந்த பெருவள்ளல் பாரி, ஓரறிவுயிராகிய முல்லைக் கொடிக்கும் பேரருள் சுரந்தான். தனது மணித் தேரை அதற்குப் பற்றிப் படரும் கொழுகொம்பாய் நிறுத்திவந்தான். பேகன் என்னும் பெருவள்ளல், தனது மலைச்சாரலில் குளிரால் நடுங்கியொடுங்கி நின்ற தோகைமயிலைக் கண்டு உள்ளம் கனிந்தான் ; தான் போர்த்தியிருந்த விலை உயர்ந்த பொன் மயமான போர்வையை அம்மயிலுக்குப் போர்த்து அகம் குளிர்ந்தான். தன்னை அடைக் கலம் அடைந்த குறுநடைப் புறவின் உறுதுயர் நீக்கச் சிபி என்னும் செங்கோல் மன்னன், தன் உடம்பையே உவந்து கொடுத்தான். தேவர்கட்குத் தீங்கிழைத்த விருத்திராசுரனை அழித்தொழிக்கத் ததிசி என்னும் தவமுனிவன், அத் தேவர்கள்பால் கொண்ட அன்பால் இந்திரனுக்குத் தனது முதுகெலும்பை ஈந்து உயிர்நீத்தான். இங்ஙனம் அன்புடையார் பலர், பிறர்க்கு என்பும் உரியராய் விளங்கினர்.
கடவுள் அன்பு வடிவானவன். ‘அன்பே கடவுள்’ என்று ஆன்றோர் இயம்புவர். ‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்’
என்பர் திருமூலர். இறைவன் அன்பு என்னும் பிடிக்குள் அகப்படும் மலையாவான். அன்பு என்னும் குடிசையுள் புகுந்து வாழும் அரசனாவான். அன்பு என்னும் வலைக்குள் விழும் பரம்பொருள் ஆவான். அன்பு என்னும் கரத்தில் அமரும் அமுதமாவான். அன்பு என்னும் குடத்துள் அடங்கும் கடலாவான் அன்பு என்னும் உயிரில் ஒளிரும் அறிவாவான் அன்பு என்னும் அணுவுள் அமைந்த பேரொளி யாவான். இங்ங்னம் அன்பு வடிவாய் இலங்கும் இறைவன் அன்பால் ஈர்க்கப்படும் திறத்தை இராமலிங்க அடிகளார். இனிது விளக்குவார். ஆதலின், ஈசனுக்கு நேசராக எவ்வுயிர்க்கும் அன்பு செய்தல் வேண்டும் என்பர் ஆன்றோர்,
ஓருயிர், மற்றோர் உயிரிடத்துக் காட்டும் அன்பு, உறவு முறையால் பல திறத்தனவாகும். கணவன் மனைவியிடத்துக் காட்டும் அன்பு, மனைவி கணவ னிடத்துக் காட்டும் அன்பு, தந்தை மைந்தனிடத்துக் காட்டும் அன்பு, மைந்தன் தந்தையிடத்துச் செலுத்தும் அன்பு, தாய் சேயிடத்துக் காட்டும் அன்பு, சேய் தாயிடத்துச் செலுத்தும் அன்பு, தமையன் தம்பி யிடத்தும், தம்பி தமையனிடத்தும், தமக்கை தங்கை யிடத்தும், தங்கை தமக்கையிடத்தும் செலுத்தும் அன்பு எனப் பலவகைப்படும். இவற்றுள் தாய் சேயின்பால் காட்டும் அன்பே தலை சிறந்தது.அதற்கு இணையாக எவரது அன்பையும் இயம்ப முடியாது.
“பால் நினைந்து ஊட்டும் தாய்
என்று பாராட்டினார் மாணிக்கவாசகர். இறைவன் உயிர்களிடத்துக் காட்டும் இணையற்ற பேரன்புக்கு உலகில் தாயன்பு ஒன்றைத்தான் உவமையாக உரைக்கமுடியும். ஆதலின் ‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து இன்னருள் புரிந்தான் ” என்று மணிவாசகர் பேசியருளினர். ‘தாயிற் சிறந்த தயாவான தத்துவனே’ என்றும் போற்றுவார்.
இத்தகைய சிறப்புவாய்ந்த அன்பினால்தான் உலகில் அறத்தை ஆற்ற முடியும். செய்யத் தக்கது. இன்னதென, ஆன்றோரால் வரையறுக்கப் பெற்றதே அறம் எனப்படும். அறுதியிடப் பெற்றது அறமாயிற்று. அன்னோரால் செய்யத் தகாதென மறுக்கப் பெற்றது மறமாயிற்று. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றனுள் பொருளும் இன்பமும் இம்மையில் மட்டுமே இன்பம் விளைப்பன. அறமோ எனின் இம்மை மறுமை வீடென்னும் மூன்றையும் ஒருங்கு பயக்கும் பெருங்குணம் உடையது. ஆதலின் வள்ளுவர் பெருமான், பொருள் இன்பங்களைக் காட்டினும் வலியுடைத்து அறம் என்பதை அறிவுறுத்த ‘அறன் வலியுறுத்தல்” என்றோர் அதிகாரத்தையே வகுத்தருளினர். அறத்தின் இலக்கணம் யாது? இதனைத் தெளிவுறச் சொல்ல விரும்பிய வள்ளுவர், தம் ஈரடிப் பாவிலும் ஓரடியாலேயே உறுதிபெற உரைத்தருளினார்.
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்‘
இவ் ஓரடியிலேயே அறத்தின் முடிந்த இலக்கணம் வரையறுக்கப் பெற்றுவிட்டது. உள்ளத்தில் கள்ளம் இல்லாதிருத்தலே நல்லறம் ஆகும். “மனத்துக்கண் மாசு’ என்று சுருங்கச் சொல்லிய வள்ளுவர், அடுத்த பாவிலேயே அதற்கு விளக்கம் தருகின்றார். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்ற மாசுகள் மனத்தைவிட்டு அகல வேண்டும். அவற்றைக் கடிந்து நடத்துவதே நல்லறமாகும் என்பர்.
‘அழுக்கா(று) அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற(து) அறம்‘
என்பது அவரது வாய்மொழி. இப் பாவில் உள்ள நான்கு மாசுகளே ஏழாகப் பெருக்கிப் பேசும் பேரறிஞரும் உளர். நான்கு என்ற எண்ணை இன்னாச் சொல்லுக்கே உரியதாக்கிப் பொய், குறளை, வன்சொல்; பயனில் சொல் எனனும் நால்வகை இன்னாச் சொற்களையும் அகற்ற வேண்டும். பொரறாமையும் ஆசையும் கோபமும் ஆகிய குற்றங்கள் போக்கவேண்டும் என்று அவர்கள் பொருள் காண்பர். மாசுகள் நீங்கிய மனத்தின் கண் அன்பு நிறைந்து ஆற்றும் அறத்தை இடையருமல் செல்லும் இடமெல் லாம் செய்தல் வேண்டும். ஒல்லும் வகையான் உவந்து ஆற்றுதல் வேண்டும். இப்போது இளம் பருவத்தை உடையோமாதலின் முதுமையில் செய் வோம் என்று எண்ணுது எப்போதும் இயற்றல் வேண்டும். ஒருவன் வாழ்நாளில் அறம் செய்யாது கழிந்த நாள் ஒன்றேனும் உளதாகாமல் என்றும் கன்றே செய்தல் வேண்டும். அங்கனம் செய்த அறம், உயிர் உடலே விட்டு நீங்கும் காலத்துப் பாது கான துணையாகப் பற்றிவரும் என்று வள்ளுவர் சொல்லுவார். క్షய பற்றித் தொடரும் இருவினப் புண்ணிய பாவமுமே ‘ என்று பட்டினத்தாரும் கட்டுரைத்தனர். அவ் அறமே மீண்டும் பிறவி தோன்ரு வண்ணம் தடுக்கும் பெருந்தடை ஆகும் என்று பேசுவார் வள்ளுவர். திருக்குறளுக்கு இணையாக வைத்து எண்ணப் படும் நாலடியாரும், நல்லறம் புரியும் நாளேப் பற்றிச் சொல்லுகின்றது. ‘மரம் ஒன்றில் கனிகளும் காய் களும் நிறைந்து காணப்படுகின்றன. பெரிய சுழற் காற்று வீசிற்று. அக் காற்றின் ஊற்றத்தால் கனி கள் தாம் உதிரும், காய்கள் உதிரா என்று யாரேனும் கூற இயலுமோ? பிஞ்சுக் காய்களுங்கூட அப் பெருங் காற்ருல் வீழ்ந்துவிடலாமன்ருே அதுபோலத்தான் மக்கள் வாழ்வும் அமையும் என்கிறார் ஒரு சமண, முனிவர். –
(தொடரும்)
வள்ளுவர் சொல்லமுதம்
வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்
Leave a Reply