வள்ளுவர் சொல்லமுதம் 7 : அன்பும் அறமும். 2 : அ. க. நவநீத கிருட்டிணன்

(வள்ளுவர் சொல்லமுதம் 6 : அன்பும் அறமும் : அ. க. நவநீத கிருட்டிணன் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் ரு. அன்பும் அறமும்.02 “முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்தற்காய் உதிர்தலும் உண்டு”என்பது அம் முனிவர் மொழி. குழந்தை பிறந்த வுடனே இறந்து போதலும் உண்டு. தக்க இளம் பருவத்தில் இறத்தலும் உண்டு. முறையே முதுமை பெருகி மறைதலும் உண்டு. ஆதலின், “யாம் இளை யம் என்னது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்‘ என்று மக்களே ஏவினர். இவ் அறத்தை ஆற்றும் முறைமையை விளக்கப்…

வள்ளுவர் சொல்லமுதம் -6 : அன்பும் அறமும் : அ. க. நவநீத கிருட்டிணன்

(வள்ளுவர் சொல்லமுதம் -5 : அ. க. நவநீத கிருட்டிணன் : கல்வியும் கேள்வியும்- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் ரு. அன்பும் அறமும் அன்பு, அனைவர்க்கும் அமைய வேண் டிய உயர்ந்த பண்பு. மக்கள் வாழ்வுக்கு அடிப்படையான பண்பும் அன்பே. இவ் அன்பென்னும் அடிப்படை யின் மேலேதான் அறமாளிகை நிறுவப்பட வேண்டும். ஆதலின், மக்கள் அறவாழ்வை வகுத்துச் சொல்லத்தொடங்கிய வள்ளுவர் பெருமான் முதலில் அன்பையே மொழிந்தருளினர். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்பது தெய்வப் புலவர் திருவாக்கு. இல்லற வாழ்வுக்கு…

வள்ளுவர் சொல்லமுதம் -5 : அ. க. நவநீத கிருட்டிணன் : கல்வியும் கேள்வியும்

(வள்ளுவர் சொல்லமுதம் -4 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்.2 – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்4. கல்வியும்‌ கேள்வியும்‌ மக்களை மாக்களினின்றும்‌ பிரித்துக்‌ காட்டுவது அவர்‌ பெற்ற கல்வியறிவே. பல்வேறு நூல்களைக்‌ கற்றலால்‌ பெற்றிடும்‌ அறிவே கல்வியாகும்‌. கற்றறிந்த நல்லார்‌ சொல்லக்‌ கேட்டலால்‌ பெற்றிடும்‌ அறிவு கேள்வியாகும்‌. பலகால்‌ பழகிய பழக்க முதிர்ச்சியின்‌ விளைவாலாகிய அறிவு அனுபவமாகும்‌. இங்ஙனம்‌ அறிவை முக்கூறு படுத்தலாம்‌.முதற்கண்‌ கல்வியறிவை நோக்குவோம்‌. கல்‌ என்ற சொல்‌, தோண்டு என்ற பொருளைத்‌ தருவது. உள்ளத்தில்‌ ஆழ்ந்த அறியாமையைக்‌…

வள்ளுவர் சொல்லமுதம் -4 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்.2

(வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் : மனையும் மக்களும்.2 “கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய புதல்வர்ப் பயந்த புகழ் மிகு சிறப்பின்‘” என்பது அகப்பாடல். அன்பினுக் காகவே வாழ்பவரார்?-அன்பில் ஆருயிர் போக்கத் துணிபவரார்? இன்ப உரைகள் தருபவரார்?-வீட்டை இன்னகை யால்ஒளி,செய்பவரார்? எல்லாம் பெண்கள் அன்றோ! அவர்தம் பங்கயக் கைகளின் நலத்தை நோக்கியன்றோ பாரில் அறங்கள் வளர்கின்றன. பிச்சை கேட்பவனும், “அம்மா ! பிச்சை”‘ என்றுதானே கேட்கின்றான். ஆதலின் இவ்…

வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்

(வள்ளுவர் சொல்லமுதம் -2 : அ. க. நவநீத கிருட்டிணன் : உ. இறையருளும் நிறைமொழியும்-தொடர்ச்சி) ௩. மனையும் மக்களும் மனை என்னும் சொல் நாம் வாழும் இல்லத்தையும் இல்லிற்குத் தலைவியாகிய இல்லானையும் குறிப்பதாகும். மனைவி என்பது மனைக்குத் தலைவி என்ற பொருளைத் தரும். மனையை ஆளுபவள் மனையாள் எனப்பட்டாள். மனைவியுடன் கணவன் மனையில் வாழ்ந்து புரியும் அறமே மனையறம் எனப்படும். அதனையே இல்லறம் என்றும் இல்வாழ்க்கை என்றும் குறிப்பர். இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது ஒளவையாரின் அமுதமொழி. மக்கள் வாழ்வு நெறிகளே…

வள்ளுவர் சொல்லமுதம் -2 : அ. க. நவநீத கிருட்டிணன் : உ. இறையருளும் நிறைமொழியும்

(வள்ளுவர் சொல்லமுதம் -1 : அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்குறள் தெள்ளமுதம்-தொடர்ச்சி) உ. இறையருளும் நிறைமொழியும் இறைவன் எங்கும் நிறைந்தவன். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருள். அவன் இல்லாத இடமே இல்லை. உயிருள் உயிராகியும் அணுவுள் அணுவாகியும் ஒளிர்பவன். அவனன்றி ஒரணுவும் அசைவதில்லை. அறக் கடலாகவும் அருட்பெருங் கடலாகவும் அறிவுருவாகவும் திகழ்பவன். விருப்பு வெறுப்பு இல்லாத விமலன். இருவினைகள் சேராத இயல்பினன். தனக்கு உவமை இல்லாத தனிப் பெருமை உடையவன். இத்தகைய இறைவன் திருவடி, பிறவிப் பிணிக்கு மருந்தாய் விளங்குவது….

வள்ளுவர் சொல்லமுதம் -1 : அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்குறள் தெள்ளமுதம்

க. திருக்குறள் தெள்ளமுதம் அமிழ்தம் என்பது அழகிய இனிய தமிழ்ச்சொல். அச்சொல்லின் இனிமைக்கு அதன் கண் உள்ள சிறப்பு ழகரமே தக்க சான்று. இயற்கை நலம் கெழுமிய இன்பத் தமிழ்மொழியே இனிமை வளம் கொழிப்பது. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு. கற்பதற்கும் கேட்பதற்கும் களித்து உரையாடுதற்கும் எளிமையும் இனிமையும் வாய்ந்தது இம்மொழி. அமிழ்தம்போன்று ஆருயிர் தழைக்கச் செய்யும் ஆற்றல் உடையது. இந்நாள் உலகில் வழங்கும் மொழிகள் மூவாயிரம். அவற்றுள் பழமையும் இலக்கிய வளமையும் பொருந்திய மொழிகள் இரண்டே. அவை நந்தம்…