வள்ளுவர் சொல்லமுதம் 7 : அன்பும் அறமும். 2 : அ. க. நவநீத கிருட்டிணன்

(வள்ளுவர் சொல்லமுதம் 6 : அன்பும் அறமும் : அ. க. நவநீத கிருட்டிணன் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் ரு. அன்பும் அறமும்.02 “முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்தற்காய் உதிர்தலும் உண்டு”என்பது அம் முனிவர் மொழி. குழந்தை பிறந்த வுடனே இறந்து போதலும் உண்டு. தக்க இளம் பருவத்தில் இறத்தலும் உண்டு. முறையே முதுமை பெருகி மறைதலும் உண்டு. ஆதலின், “யாம் இளை யம் என்னது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்‘ என்று மக்களே ஏவினர். இவ் அறத்தை ஆற்றும் முறைமையை விளக்கப்…

வள்ளுவர் சொல்லமுதம் -6 : அன்பும் அறமும் : அ. க. நவநீத கிருட்டிணன்

(வள்ளுவர் சொல்லமுதம் -5 : அ. க. நவநீத கிருட்டிணன் : கல்வியும் கேள்வியும்- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் ரு. அன்பும் அறமும் அன்பு, அனைவர்க்கும் அமைய வேண் டிய உயர்ந்த பண்பு. மக்கள் வாழ்வுக்கு அடிப்படையான பண்பும் அன்பே. இவ் அன்பென்னும் அடிப்படை யின் மேலேதான் அறமாளிகை நிறுவப்பட வேண்டும். ஆதலின், மக்கள் அறவாழ்வை வகுத்துச் சொல்லத்தொடங்கிய வள்ளுவர் பெருமான் முதலில் அன்பையே மொழிந்தருளினர். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்பது தெய்வப் புலவர் திருவாக்கு. இல்லற வாழ்வுக்கு…