தலைப்பு-வன்முறைக்கு எதிரான வள்ளுவர் மருந்து, பெ.அருத்தநாரீசுவரன்; thalaippu_vanmuraikkumarunthu03

வள்ளுவர் விளக்கும் வன்முறைக்கு

எதிரான மருந்து

  சமுதாயத்தில் தாம் நினைத்தால் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கக் கூடிய அளவிற்கு நிறைந்த பண்புலநலன்கள் கொண்ட பெரியோர்கள் சிலர் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட பெரியோர்களை வள்ளுவர் சான்றோர் என்று குறிப்பிடுகின்றார். சான்றோர் என்ற சொல் வள்ளுவர் காலத்திற்கு முன்பு போர்க்களத்தில் போராடுகின்ற வீரர்களைக் குறித்த சொல். பிற்காலத்தில் போரிட வேண்டும் என்று தேவை இல்லாத நேரத்திலுங்கூட மனஉறுதியும் பெருந்தன்மையும் வான்குணமும் கொண்ட மனிதர்கள் உருவானார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை வள்ளுவர் சான்றோர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

… வன்முறைகள் வளர்ந்து சமுதாயத்தில் அச்சமும் பாதுகாப்பின்மையும் பெருகுகின்ற நேரத்தில் வன்முறையை வன்முறையால் நிறுத்தலாம் என்பது சரியான கருத்து ஆகாது. இந்த நிலையில் சான்றோர்கள் வன்முறைக்கு எதிரான ஒன்று என்று கருதுவது அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய குணங்களைத்தான். இந்தக் குணங்கள்தான் வன்முறைக்கு எதிரான மருந்தாக விளங்க முடியும் என்பதை வள்ளுவர் உணர்த்துகிறார்.

முனைவர் பெ.அர்த்தநாரீசுவரன்:

திருவள்ளுவர் காட்டும் நெறிகள்:

சான்றாண்மை நெறி: பக்கம். 101-103

அட்டை- வள்ளுவர் காட்டும் நெறிகள் : attai_valluvarkaattum_nerikal