(அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை தொடர்ச்சி)

kuralarusolurai_mun attai

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 091. பெண்வழிச் சேறல்

மிகுகாமத்தால் அடிமையாகி, மனைவியின்

மொழிவழிச் சென்று அறம்மறத்தல்.

  1. மனைவிழைவார், மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்,

     வேண்டாப் பொருளும் அது.

      பெண்வழி நடப்பார், பயன்அடையார்;

       நல்செயல் வல்லார், விரும்பார்.

 

  1. பேணாது பெண்விழைவான் ஆக்கம், பெரியதோர்

     நாணாக நாணுத் தரும்.

  மனைவிக்கு அடிமை ஆகியார்

       வளநலம், வெட்கப்படத் தக்கவை.

 

  1. இல்லாள்கண் தாழ்ந்த இயல்(பு),இன்மை; எஞ்ஞான்றும்,

     நல்லாருள் நாணுத் தரும்.

      மனைவியிடம் தாழ்ந்து நடத்தலும்,

       வெட்கத்துக்கு உரிய வறுமைதான்.

 

  1. மனையாளை அஞ்சும், மறுமை இலாளன்

     வினைஆண்மை, வீ(று)எய்தல் இன்று.

     மனைவிக்கு அஞ்சுவான் செய்திற

       ஆளுமை, பெருமை அடையாது.     

 

905.. இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்,மற்(று) எஞ்ஞான்றும்,

     நல்லார்க்கு நல்ல செயல்.

     மனைவிக்கு அஞ்சுவான், நல்லார்க்கு

       நல்லவை செய்தற்கும் அஞ்சுவான்.

 

  1. இமையாரின் வாழினும், பா(டு)இலரே, இல்லாள்

     அமைஆர்தோள், அஞ்சு பவர்.

       மனைவியின் அழகுக்கு அடிமையார்,

       வாழ்க்கையில் பெருமை பெறார்.

  1. பெண்ஏவல் செய்(து)ஒழுகும் ஆண்மையின், நாண்உடைப்

     பெண்ணே, பெருமை உடைத்து.

     ஏவல்செய் அடிமைக் கணவனைவிட,

       நாணும் பெண்ணே பெருமையள்.

  1. நட்டார் குறைமுடியார், நன்(று)ஆற்றார், நல்நுதலாள்

     பெட்டாங்(கு) ஒழுகு பவர்.

     பெண்அடிமையார், நண்பர்தம் குறையையும்

       போக்கார்; நல்லனவும் ஆக்கார்.

 

  1. அறவினையும், ஆன்ற பொருளும், பிறவினையும்,

     பெண்ஏவல் செய்வார்கண் இல்.

     மனைவிக்கு ஏவல் செய்வாரிடம்

       அறம்,பொருள், இன்பம் இரா.

 

  1. எண்சேர்ந்த நெஞ்சத் திடன்உடையார்க்(கு), எஞ்ஞான்றும்,

     பெண்சேர்ந்(து)ஆம் பேதைமை இல்.

       சிந்தனையும், நெஞ்சுஉறுதியும் கொண்டார்,

       பெண்ணுக்கு அடிமை செய்யார்.

 பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன் :ve.arangarasan

(அதிகாரம் 092. வரைவின் மகளிர்)