பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே! – சி.இலக்குவனார்
கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன. பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே. இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.
செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார் :
தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 137
அருமையான செய்தி.பலகாலமாக நாம் சொலிவருகிறோம்.பாவாணர் கருத்தின் வழி மறுத்த அன்பர்கள் பலர்.ஐயா இ லக்குவனார் கருத்தே சான்றாகும்போது பிறகென்ன?
மகிழ்ச்சி ஐயா.