அ பெ கா பண்பாட்டு இயக்கம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு 

 writing01

பெருமதிப்பிற்குரியீர்  வணக்கம் .

 தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய – பெரியாரிய -மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையைக் கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .

அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு  பகுதியாக இவ்வாண்டு  எழுத்தாளர்கள்,    ஆய்வாளர்களுக்கான  25 தலைப்புகளிலான இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டியினை அறிவிப்பதில்  மகிழ்ச்சியடைகிறது .

ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு  செய்யப்படும்

தேர்வு பெறும்  ஒவ்வொரு கட்டுரைக்கும் உரூ 2000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்

தேர்வு பெறும்  கட்டுரைகளை,  புதுக்கோட்டையில் எதிர்வரும்அக்டோபர் (2014 ) மாதத்தில்

நடைபெறும் மூன்று நாள் சிறப்புக் கருத்தரங்கில் சமூகவியல் ஆய்வில் புகழ்பெற்ற படைப்பாளுமைகளின்  தலைமையிலும்  திறனாய்விலும் வாசித்தளிக்க வாய்ப்பு வழங்கப்படும்

தேர்வு பெறும் கட்டுரைகள் அனைத்தும் புகழ்பெற்ற புத்தக நிறுவனத்தால் தனி நூலாக வெளியிடப்படும்

ஆய்வுக்கட்டுரைகளை  ஏ 4 தாளில் 10 முதல் 15 பக்க அளவினைக் கொண்ட தட்டச்சுப்

படிகளாய் (குறுந்தகடுகளுடன் ) அனுப்பிட வேண்டும் .

ஆய்வுக்கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள /எடுத்தாளப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளுக்குமான ஆதார நூல்களின் விவரங்கள் தனித்தாளில் குறிப்பிடப்பட்டு இணைக்கப்படவேண்டும்

கட்டுரையாளரின் பெயர், முகவரி, மின்அஞ்சல் முகவரி, அலைபேசி எண்கள் போன்ற விவரங்களுடன் கட்டுரை தம் சொந்த படைப்பே என்பதற்கான உறுதி மொழியையும் தனியே இணைக்கவேண்டும் .

ஆய்வுக் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.07.2014

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர், அபெகா பண்பாட்டு இயக்கம், 832, கீழ இராச வீதி புதுக்கோட்டை-622 001

 மின் அஞ்சல் முகவரிகள்:

drnjayaraman@gmail.com

rasipanneerselvan@gmail.com

jryazhini2012@gmail.com

தொடர்புக்கு: 9486752525 ( இராசி .பன்னீர்செல்வன் )

ஆய்வுக் கட்டுரைகளுக்கான   பொருள்

1. ஆரிய வருகைக்கு முன்பான ஆதி இந்தியச் சமூகம்

2. வருணம், சாதி – தோற்றமும் இருப்பும்

3. வருண சாதியப் படிநிலைகளின் எதிர்ப்பு வரலாறு

4. சாதியத்தின் மீதான சமண பௌத்த குறுக்கீடுகள்

5. இந்து மதத்தின் தோற்றமும் நிலைநிறுத்தப்பட்ட விதமும்

6. மனு சுமிருதி தொகுக்கப்படுவதற்கான சூழலும் தேவையும்

7. பௌத்தமும் சமணமும் அழிக்கபட்ட விதம்

8. இந்திய சாதியில் இசுலாத்தின் இடையீடுகள்

9. கிறித்துவமும் சாதியும்

10 மத மாற்றம் போல் சாதி மாற்றம் சாத்தியப்படாதது ஏன்?

11 இந்து மதம் ஏன் ஒரு  பரப்புரை சமயமாக இல்லை? (கிறித்துவ முசுலிம் மதங்களைப் போல்)

12 பிரிட்டிசு ஆட்சியில் சாதியம் – உடன்பாடுகளும்   முரண்பாடுகளும்

13.பிரிட்டிசு ஆட்சியும் பிராமணர்களும்

14 பிரிட்டிசு ஆட்சியும் பிராமணரல்லாதோரும்

15 பிரிட்டிசு ஆட்சியும் தலித்துகளும்

16அம்பேத்கருக்கு முந்தைய சமூகச் சீர்திருத்த  இயக்கங்கள்

17 அம்பேத்கர் சாதிய அடிப்படையிலான ஒடுக்கு முறையை

அம்பலப்படுத்தியதால் ஆதாயம் அடைந்தவர்கள்

18. அம்பேத்கரின் இந்து மதக் கருத்தியல்களுக்கு எதிரான போராட்டங்கள்  (பௌத்தம் தழுவியது வரை )

19 அம்பேத்கர் சமூக நீதி என்பதை நாடளாவிய விவாதப்பொருளாக்கியதால் விளைந்த பயன்கள்

20.அம்பேத்கர் அதிகார அமைப்புகளுக்குள் பங்கெடுத்து ஆற்றிய

பணிகளால் விளைந்த பலன்கள்

21 சாதியும் பெண்களும்/பெண்களின் ஊடாக சாதியம்

22 இன்றைய சாதியும் தொழில்களும்

23 சுதந்திர இந்தியாவை சாதி கைப்பற்றிய விதம்

24 உலகமயமாக்கல் காலக்கட்டத்தில் சாதியம்

25 இந்தியச் சமுக அமைப்பும் இட ஒதுக்கீடுகளும்

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/01/indian-rupee03-250x166.jpg