ஓய்வில் உற்சாகம் இல்லை! – ஆற்காடு க. குமரன்
ஓய்வில் உற்சாகம் இல்லை!
கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை
ஊரடங்கில் கிடைத்த ஓய்வில் உற்சாகம் இல்லை
தொற்றுநோய்மியை விட வேகமாய்த்
தொற்றிக் கொண்ட பயம்
பற்றிக்கொண்டதில்
தலை சுற்றுகிறது!
எச்சம் கூட நஞ்சு என்று
அச்சம் கொண்டோம்
மிச்சமுள்ள உயிர்
அற்பமாய்ப் பதறுது!
இணையத்தோடு இணைந்திருக்க
இல்லங்கள் சிறந்திருக்க
அக்கம்பக்கம் தொடர்பில்லை
வம்பு வழக்கு ஏதும் இல்லை
அடங்கிக் கிடக்கிறோம்
முடங்கிக் கிடக்கிறோம்
வதங்கி மடிகிறோம்!
ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
பாடிய பாரதியும்
பார்வையாளர் இன்றி
தனித்திருக்கிறார்
எண்ம இந்தியா
வல்லரசாகும் இந்தியா
எல்லாம் பெயரளவில்!
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114
Leave a Reply