சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்
அசித்தர்
பேசி – 93827 19282
தமிழ் மருத்துவம்
கலைச்சொற்கள்
அக்ரூட் – உருப்பருப்பு, படகரு
அங்குட்டம் – பெருவிரலளவு
அசோகு – பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம்
அண்டத்தைலம் – கோழி முட்டை நெய்மம்
அண்டவாதம் – விரையழற்சி
அட்சதை – மங்கல அரிசி
அத்தர் – பூச்சாறை
அத்தி – எலும்பு
அத்துவைதம் – இரண்டன்மை
அதிமதுரம் – சாற்றுப்பூடு
அதிரசம் – பண்ணியாரம்
அப்பிரகம் – காக்கைப்பொன்
அபானம் – மலவாய், குதம், எருவாய்
அபான வாயு – கீழ்வளி, குசு
அபின் – கசமத்தப்பிசின்
அமாவாசை – காருவா
அமிலம் – புளிகம்
அர்ச்சனை – படையல், வழிபாடு, பூசனை
அரிதாரம் – பூச்சுப்பொன்துகள், மான்மதப்பொடி
அரோரூட் – அம்புக்கிழங்கு, கணைக்கிழங்கு, கணைவேரி
அல்வா – இன்களி, தீம்பசை
அன்னாசி – செந்தாழை
ஆகாசத்தாமரை – வானத்தாமரை, காயத்தாமரை
ஆகாரம் – உணவு, சாப்பாடு
ஆசுத்துமா – இரைப்புநோய்
ஆத்மா – ஆதன், உயிர், ஆவி
ஆப்பிள் – அரத்தி
ஆயின்மெண்ட் – மருந்துநெய்
இங்கு – பெருங்காயம்
இங்குலிங்கம் – சாதியிலங்கம்
இந்திரகோபம் – தம்பலபூச்சி
இந்திரியம் – புலனுறுப்பு,விந்து
இந்துப்பு – சிந்துப்பு
இலவங்கம் – கருவா, கருவமரம்
ஈசன் – இறைவன், சிவன்,அரசன்,குரு, மூத்தோன்
ஈசுவரமூலி – பெருமருந்துக்கொடி
உருத்திராக்கம் – கண்மணிக்காய்
உலோகம் – மாழை, மாழைத்தாது
உன்மத்தம் – பித்தியக்காரன், பித்தன், வெறியன்
ஊதா – செந்நீலம்
ஊதாமுள்ளி – செம்முள்ளி
ஏலம் – மணகம்
ஏலாதி – மணகமுதலி
ஐசு – பனிக்கட்டி
ஓமத்திராவகம் – ஓமத்தீநீர்
ஔடதம் – மருந்து
ககனம் – வான், காயம், மேலுலகு
கச்சுரை – பேரீந்து
கசகசா – கசமத்த விதை
கசாயம் – கருக்கு, கியாழம்
கஞ்சா – கஞ்சம், குல்லை,
கஞ்சங்குல்லை
கபாலம் – தலை
கமலம் – தாமரை
கர்ப்பம் – கரு, கருப்பம்
கராம்பு – கருவம்பூ, கருவமரம்
கர்மம்,கன்மம் – கருமம்
கற்பூரம் – சூடன்,எரியணம்
காப்பி – குளம்பி
காமாலை – மஞ்சநோய், மஞ்சள் பிணி
காயகற்பம் – ஆயுள் / வாழ்நாள் நீட்டிப்பு மருந்து
காயசித்தி – உடலை நீட்டத்திறம்
காயம் – உடல்
கெச்சக்காய் – கழற்சிக்காய்
கேரட் – செம்மங்கி, இன்முள்ளங்கி,செங்காய்
கொய்யா – காழ்ப்பழம்
கொப்பரை – கொட்டான்காய், நெய்க்கொட்டான்
கோந்து – பிசின்
கோமயம் – கோமூத்திரம்
கோரோசனை – ஆமணகம்
குக்குடம் – கோழி
குங்குமம் – செஞ்சாந்து, சாந்தகம்
குதிவாதம் – குதி நரம்பிழுப்பு வலி
கும்பித்தல் – மூச்சடக்குதல்
குல்கந்து – முளரிப்பச்சம்
குஃழ்டம் – குட்டம்
சங்கபுசுபம் – சங்குப்பூ
சஞ்சீவி – உயிர்ப்பு மருந்து
சண்டமாருதம் – பெருங்காற்று
சதமூலி,சதாவரி – தண்ணீர்விட்டான் கிழங்கு
சதவீரியம் – வெள்ளறுகு
சதை – தசை
சப்தம் – ஒலி, ஓசை
சப்ச்சா – திருநீற்றுப்பச்சை விதை
சரீரம் – உடல்
சவ்வரிசி – நெப்பபரிசி
சவ்வாது – புழுகு
சவுக்கு – குச்சிரைமரம்
சவுக்காரம் – துணி வழலை
சாம்பிராணி – சுராலை, தூவப்பொடி
(தொடரும்)
Leave a Reply