நக்கீரனுக்கு நன்றி!
நக்கீரனுக்கு நன்றி!
அரசியல் செய்திகளுடன் தமிழுணர்வு செய்திகளையும் வெளியிடும் இதழ்களில் நக்கீரனும் ஒன்று. தமிழ்க்காப்புக்கழகம், தென்னிந்திய நடிகர்சங்கத்தின் மட்டையாட்டத்திற்கான அணிகளின் பெயர்களைத் தமிழில் சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனைப் பாரறியும் வண்ணம் தொகுதி 28, எய் 109 நாள் சித்திரை 3- 5/ ஏப்.16-18 இதழில்வெளியிட்டுள்ளது நக்கீரன். அதற்கு நாம் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகர் மட்டையாட்ட அணிகளின் பெயர்களுக்கு எதிர்ப்பு!
பொருட்படுத்தாத நடிகர் சங்கம்! (வந்த செய்தி)
உறுதிப்படுத்தப்பட்ட உண்மை: நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு 26 கோடி உரூபாய் நிதித் திட்டம் போட்டுப் பல வழிகளிலும் திரட்டும் வேலையில் இறங்கியுள்ளது நடிகர் சங்கம். இதன் முதல் கட்டமாக நட்சத்திர மட்டையாட்டப் போட்டியை இந்த மாதம் மிகப் பேரளவில் நடத்தவுள்ளனர். கோவை கிங்சு, சென்னை சிங்கம்சு, இராம்நாட் இரைனோசு, சேலம் சீட்டாசு, திருச்சி டைகர்சு, தஞ்சை வாரியர்சு என எட்டு அணிகளை உருவாக்கியுள்ளனர். அணிகளின் பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழ் உணர்வாளர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அணிகளின் பெயர்களைத் தமிழில் மாற்றுமாறு தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவரும் மொழி அறிஞருமான இலக்குவனார் திருவள்ளுவன் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விசால் உட்பட மேலாளர்கள் அனைவருக்கும் எழுதிய கடிதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனராம்.
– நக்கீரன், சித்திரை 3- 5/ ஏப்பிரல் 16-18, 2016.
[பி.கு. இவ்வாறு வேண்டுகோள் விடுப்பதால் பயன் உண்டா எனச் சிலர் வினவலாம். காலப்போக்கில் பயன் ஏற்படும். முன்பு தமிழ்க்கா்பபுக்கழக வேண்டுகோளுக்கு ஏற்ப, பாண்டியன் சவுண்டுசர்வீசு என்னும் படத்தின் பெயரைப் பாண்டியன் ஒலி பெருக்கி நிலையம் என மாற்றியுள்ளனர். அதற்கு மறைந்த இயக்குநர் இராசு மதுரவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். சிலர் உடனடியாக ஏற்காவிட்டாலும் அடுத்தடுத்து நம் கருத்தை ஏற்கும் நிலைக்கு வருவர். சான்றாகப் பல்துறைக்கலைஞர் சிம்பு அடுத்த படத்தின் பெயரைத் தமிழில் வைப்பதாகத் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கமும் அடுத்த நேர்வுகளில் தமிழைக்கருதிப் பார்க்கும் என எதி்பார்க்கிறோம். ஒருவேளை விளம்பரப் புரவலராகக் கதிர்(சன்)தொலைக்காட்சி இல்லாமல் இருந்தால் இப்பொழுதேகூட கேட்டிருக்கும்.]
Leave a Reply