புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் 

– மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு –

வந்தவாசி. நவ.26. வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டமும், வந்தவாசி சுழற் சங்கமும்  இணைந்து  தேசிய நூலக வாரப் பொன் விழா  நடத்தின.

  இவ் விழாவில், பாடப்புத்தகங்கள்  தாண்டிய பிற குமுக(சமூக) – அறிவியல் – வரலாறு -இலக்கியப் புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் என்று மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்  மரு.எசு.குமார் குறிப்பிட்டார்.

        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார்.

விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.

தேசிய நூலக வார விழாவையொட்டி  நடத்தப்பட்ட  போட்டிகளில் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர்.

  வெற்றி பெற்ற பள்ளி மாணவ – மாணவிகளை வாழ்த்தி, திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் இரா.கோகிலவாணி, வந்தவாசி சுழற் சங்கத் தலைவர் எசு.வெங்கடேசன் ஆகியயோர் வாழ்த்திப்  பேசினர்.

         -வந்தை அன்பன்