Prof.kannappan01

பேராசிரியர் பழ. கண்ணப்பன் அவர்கள் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில்

தனிய கணிதத்துறையில் (Pure Mathematics) 36 ஆண்டுகளாகப்

பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று இருந்தவர்

பிப்பிரவரி 13 அன்று இயற்கை எய்திவிட்டார்கள்.

வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியில் சேர்ந்த

முதலணித் தமிழர்களுள் ஒருவர்;  வாட்டர்லூ வட்டாரப் பகுதியில்

முதன்முதலாகத் தமிழ்ப்பள்ளி  நடத்தியவர்களுள் ஒருவர்;

பல இடங்களில் இருந்தும்

தமிழார்வலர்களை அழைத்துக் கவியரங்கம் நடத்தியவர்;

வாட்டர்லூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மன்றத்தில் பொங்கல்விழா

முதலானவற்றில்  கலந்து அருமையான உரைகள் ஆற்றியவர்.

பேராசிரியர் குடும்பத்தில் அவரை இழந்து வாடும் மனைவி திருவாட்டி அரங்கநாயகி

அவர்கள், அவர்தம் மக்கள் நடராசு, மலர், கணேசன், முத்து, கலை,  மருமகன், மருமகள்,  பேரக்குழந்தைகள் அறுவர் ஆகிய அனைவருக்கும்  ‘அகரமுதல’ தன் இரங்கலைத்

தெரிவித்துக்கொள்கின்றது.

தரவு: பேரா.செல்வா