முதலமைச்சர் கணிணித்தமிழ் விருதின் முதல் விருதாளர் தெய்வசுந்தரம்
பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கு
முதலமைச்சர் கணிணித்தமிழ் விருது வழங்கப் பெற்றது!
முதலமைச்சர் கணினித்தமிழ் விருது (2013-14) வழங்கும் விழா புரட்டாசி 25, 2046 / 12-10-2015 திங்கள்கிழமை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருது வழங்கினார். இவ்விருது தோற்றுவிக்கப்பட்டதும் முதலாவதாக விருதினைப் பெறும் பெருமைக்குரியவர் பேரா.ந.தெய்வசுந்தரம். தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர், சமூகவளர்ச்சித்துறை அமைச்சர், செயலர், தமிழ்வளர்ச்சித்துறைச் செயலர், தமிழ்நாடு அரசு தலைமைச்செயலர், முதலமைச்சரின் அறிவுரைஞர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
‘மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் ‘ என்ற தமிழ்க்கணியனை(மென்பொருளை) உருவாக்கியதற்காக இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த மென்பொருள் உருவாக்கத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய திரு. நயினார்பாபு, பேரா. அ. கோபால், திருமதி,ம. பார்கவி, திருமதி மு. அபிராமி, முனைவர் கி. உமாதேவி ஆகியோர் சார்பாக இந்த விருதைப் பெற்றுக்கொண்டதாக பிறர் உழைப்பை மதிக்கும்நன்றியுடன் பேரா.ந.தெய்வநாயகம் குறிப்பிட்டார்.
மிக்க மகிழ்ச்சி!