வெருளி நோய்கள் 1346 -1350 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1341 -1345 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1346 -1350
- தென் கரோலினா வெருளி – Southcarolinaphobia
தென் கரோலினா(Southcarolina) மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் கரோலினா வெருளி.
தென்கரோலினா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.
00
- தென் தகோட்டா வெருளி – Southdakotaphobia
தென் தகோட்டா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் தகோட்டா வெருளி.
தென் தகோட்டா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.
00
- தென் வெருளி – Notophobia
தெற்குப் பகுதி குறித்த வரம்பற்ற பேரச்சம் தென் வெருளி.
தென்திசை எமனுக்குரியது.எனவே, தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில் குடியிருக்கவோ வாங்கவோ மாட்டார்கள். இவ்வாறு கணியத்தின்படியான நம்பிக்கைகள் அடிப்படையில் தென்திசைகுறித்து பெரிதும் அஞ்சுவோர் நம் நாட்டில் உள்ளனர்.
00
- தென்துருவ வெருளி – Antarcticaphobia / Notiopolophobia
‘அண்டார்டிகா’ குறித்த காரணமற்ற பேரச்சம் தென்துருவ வெருளி.
தென்துருவம்(South Pole) 98விழுக்காடு பனிப்பாறைகளால் நிறைந்த பகுதி. மிகுதியும் குளிர்ப்பகுதி என்பதால் துணிந்து ஆராய்ச்சிக்குச் செல்பவர்களுக்கு அச்சம் வருவது இயல்புதான். ஆனால், அங்கே செல்லாமலே அதைப்பற்றிக் கேள்விப்படும் பொழுதும் அதன் படங்களைப்பார்க்கும் பொழுதும் காரணமற்ற அச்சம் சொள்வோர் உள்ளனர்.
அண்டார்டிக்கா என்பது கிரேக்கக் கூட்டுச் சொல். இதன் பொருள்”ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான”, “வடக்கிற்கு எதிரிடையாக” என்பது ஆகும்.[
00
- தென்பயண வெருளி – Notiophobia/ Surphobia
தென்பயணம் குறித்த வரம்பற்ற பேரச்சம் தென்பயண வெருளி.
Notio என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தெற்கு எனப் பொருள்.
காண்க: தென் வெருளி(Notophobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply