வெருளி நோய்கள் 1501-1505 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1496-1500 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1501-1505
- நீலப்பறவை வெருளி – Bluebirdphobia/ blepuliaphobia
பாடும் பறவை என்று சொல்லப்படும் நீலப்பறவை(Bluebird) மீதான அளவுகடந்த பேரச்சம் நீலப்பறவை வெருளி.
பாடும் பறவை தீங்கற்றவை. அதனைக் கூண்டில் அடைத்தாலும் பாடும். இதனை மகிழ்ச்சியின் வெளிப்பாடாகக் கருதக்கூடாது. விடுதலை பறிக்கப்பட்டதன் வலியாகக் கருத வேண்டும் என்பர்.எனவே, நீலப்பறவை வெருளி என்பது நீலப்பறவையின் நிலைமை கண்டு கவலையும் அச்சமும் கொள்வது என்பர் சிலர்.
பறவை வெருளியின் வகையைச் சேர்ந்தது. எனவே, பறவை வெருளி உள்ளவர்களுக்கு நீலப்பறவை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
சிலர் இதனை பிலெபிலியா – Blephilia வெருளி என்பர். இது நீல வண்ணப் பூவைக் குறிக்கும். நீலப்பறவையைக் குறிக்காது.
00
- நீலவண்ண வெருளி-Cyanophobia/Naftikoblephobia
நீல நிறம் தொடர்பான தேவையற்ற மிகையான பேரச்சம் நீலவண்ணவெருளி.
நீல நிறம், நீல நிற ஆடைகள், நீல நிறப்பொருள்கள், தொடரபான படங்கள் , படக்காட்சிகள் மீது வரும் பேரச்சமே இது.
kyanos என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அடர் நீலம்.
naftikள ble என்றால் கிரேக்கத்தில் நாவாய் நீலம் எனப்பொருள்.
00
- நீளுருளைப் பொரியல் வெருளி – Tiganitepatatephobia
நீளுருளைப் பொரியல் மீதான அளவுகடந்த பேரச்சம் நீளுருளைப் பொரியல் வெருளி.
நீளுருளைப் பொரியல் = பிரெஞ்சுப் பொரியல் (French fries)என்றும் விரலளவுப் பொரியல் (finger chips) என்றும் அழைக்கப்பெறும் நீளத் துண்டு உருளைக்கிழங்குப் பொரியல்.
இதனைச் சுருக்கமாக நீளி எனலாமா? நீண்டவை பல இருப்பினும் நீள் உருளைப் பொரியல் என்னும் பொருளில் பயன்படுத்தினால் நிலைக்குமல்லவா?
00
- நீள்முகி வெருளி -Dobermanphobia நீள்முகநாய் வெருளி (Doberman) பற்றிய அளவுகடந்த பேரச்சம் நீள்முகி வெருளி.
நெடுமுகக் குரங்கை நெடுமுகி எனச் சுருக்கிக் குறிப்பிடுவதுபோல், நீள்முக நாயை நீள்முகி எனச் சுருக்கமாகக் கூறலாம்.
00 - நீள் தாழ்வார வெருளி – G🔋nobphobia
நீள் தாழ்வாரம்(long hallway) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நீள் தாழ்வார வெருளி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply