(வெருளி நோய்கள் 1521-1525  தொடர்ச்சி)

நெடும்பாசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடும்பாசி வெருளி.
நெடும்பாசிகள் அழுகும்போது, நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.இந்த வாயுக்களை மூச்சு இழுத்து விடுவதால் கடுமையான தலைவலி, குமட்டல், மூச்சிரைப்பு முதலியன ஏற்படும் எனப் பேரச்சம் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00

நீண்ட ஒடுங்கிய வெள்ளை கருப்பு இறகுகளை உடைய ஒரு வகை நீள்வால் பறவையைப்(magpie) பார்த்தால் தீயது நிகழும் என்ற நம்பிக்கையில் அப்பறவையைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது நெடுவாலி வெருளி.
இலத்தீனில் ‘pica’ என்னும் சொல் மேகுபை(magpie) என்னும் பறவையைக் குறிக்கிறது. அதுவே நெடுவால் பறவை> நெடுவாலி என இங்கே குறிக்கப்பட்டுள்ளது.
00

உயரமாக வளர்வதுகுறித்த அளவுகடந்த பேரச்சம் நெட்டை வெருளி. உயர வெருளி என்றால் உயரமான கட்டடங்கள்,மலைகள் மீதான அச்சம் எனப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக நெட்டையாக வளர்வது என்ற உரிய பொருளில் நெட்டை வெருளி என்பது சரியாக இருக்கும்.
உயரமாக இருந்தால் கீழே விழும் வாய்ப்பு அதிகம், வாசல் அல்லது கூரைகளில் தலை இடிபட்டுத் துன்பம் வரும், ஊர்திகளில் பயணம் செய்வது இடர்ப்பாடாக இருக்கும், நெட்டையன் அல்லது நெட்டைச்சி எனக் கேலி பேசுவார்கள் என்பனபோன்ற கவலைகள் கொண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
procerus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் உயரம். எனினும் இங்கே நெடுமையைக் குறிக்கிறது.
காண்க: நெட்டையர் வெருளி(Gigantasophobia)
00

நெபுரசுகா மாநிலம், மாநில மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள், தொழில் முதலான அனைத்தின் மீதும் அல்லது சிலவற்றின் மீது அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் நெபுரசுகா வெருளி.
00