(ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி)

சலாமிசின் (Salarmis) மதகுருவாம் எபிபணியாசு (Epiphanias) என்பார், மோசசுக்கு (Moses) வழங்கிய சட்ட கட்டளைகள், நீலமணிக்கல்லில்தான் செதுக்கப்பட்டன எனக் கூறுகிறார். (Scoffs’ periplus page: 171). நார்மடி ஆடைகள் எகித்திலேயே, அக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன ஆதலாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், அவற்றினும் உயர்தரம் வாய்ந்ததான, பிற்காலத்திற் போலவே அக்காலத்திலும் இந்தியா மட்டுமே தரக்கூடியதுமான பருத்தி ஆடைகளால் ஆனவையாதல் வேண்டும். ஆதலாலும், அரசர்க்கான உடைகள் இந்திய மசுலினால் தைக்கப்பட்டவையாம். வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள் ஆகியவை பொருத்தமட்டில், ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்பொருள்களும், இவற்றிற்கு இனமான பொருள்களும், மேலை நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டன. ஆதலின், இறக்குமதி செய்யப்பட்ட இப்பொருள்கள் அனைத்தும் இல்லையாயினும், இவற்றில் ஒரு பகுதி, இந்தியாவிலிருந்து வந்தனவாம் என்பதில் சிறிது உண்மையிருக்கிறது. இலவங்கப்பட்டையைப் பொருத்தவரை கி.மு.15 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த அட்சே புசுட்டு (Hatshe pust) என்ற அரசியாரின் படையெடுப்பு குறித்த, எகித்து மொழிக் கல்வெட்டுகள் எகிப்துக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டுவிட்ட, புண்டு நாட்டின் அற்புதங்களில் ஒன்று, இலவங்கப்பட்டை மரம் எனக் குறிப்பிடுகின்றன என்பது குறிப்பிடப்படலாம். (Scoff’s periplus Page: 82). ஆனால், இலவங்கப்பட்டை குறித்த வாணிகத்தின் ஏகபோக உரிமையைத் , தங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்வதற்காக, அதன் இந்தியப் பிறப்பை, மேற்கத்திய மக்களிடையே மறைத்துவிட்ட அராபிய வணிகர்களால், இலவங்கம், இந்தியத் துறைமுகங்களிலிருந்தே, அவ்விடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இலவங்கம், மலபாரிலும், சீனாவிலும் வளர்கிறது. ஆனால், அதை மேலைநாடுகளுக்குக் கொண்டு சென்ற அராபிய வணிகர்கள் அதன் ஆப்பிரிக்கப் பிறப்புப் பொய்க் கவிதைகளைக் கட்டி வளரவிட்டனர், தெளிவற்ற தன்மையிலும் அறிவுறுத்தும் பகுதி, பிளைனி அவர்களின் எழுத்தில் உளது அவருடைய காலத்தில், மக்களின் பேராதரவு பெற்றிருந்த ஒருவகை இலவங்கம் குறித்துத் தோமுனா (Thomna) வைத் தலைநகராகக் கொண்டிருந்த அராபியர்களின் அரசன், கெபுனிடே (Kefianitae) என்பான், அரசு ஆணை அல்லது . பொது ஏலம் மூலம் விற்பனையை ஒழுங்குபடுத்தும், முழுக்கட்டுப்பாட்டுரிமையை ஒரு காலத்தில் பெற்றிருந்தான் என்றும், அம்மரங்கள், ஆட்சியிலிருப்போரின் கொடுஞ் செயல் துணையாலோ வெறும் எதிர்பாராச் சூழலாலோ, அறுதியிட்டுச் சொல்ல இயலா நிலையில், கொடிய காட்டு மனிதர்களால் எரிக்கப்பட்டுப் பெற்ற ஒரு பவுண்டு நிறையுள்ள அம்மரத்தின் சாறு, தெனாரி (Denari) என வழங்கும் ஆயிரம் உரோம் வெள்ளி நாணயம் வரை, சில சமயம் ஆயிரத்து ஐந்நூறு நாணயம் வரையும் விலை போயிற்று என்றும் திருவாளர் பிளைனி அவர்கள் கூறுகிறார். திருவாளர் பிளைனி அவர்கள் அளிக்கும் அகச் சான்றுகளில் சில அத்தகைய பேரழிவுக்கு, இலவங்கத் தோட்டம் தீப் பிடித்துக் கொள்ளுமளவு தென்றல் காற்று கடுமையாக வீசுவதைக் காரணம் காட்டுகின்றன. ஈண்டு இரண்டு செய்திகளைக் குறிப்பிட வேண்டும். முதலாவதாக, அரேபிய ஆட்சியாளர்கள், இலவங்க வாணிகத்தின் மீது கொண்டிருந்த கடுமையான கட்டுப்பாடு. இரண்டாவதாக இலவங்கம் வழங்குவதில் ஏற்பட்டுவிட்ட தோல்விக்கு, உண்மையான காரணத்திற்குப் பதிலாக உதாரணத்திற்கு, இந்தியப் பகுதியிலிருந்து வரும் கடற்பயணத்தின்போது அனுபவித்த, பேரழிவு விளைவித்து விட்ட கொடுங்காற்று போலும் உண்மையான காரணத்திற்குப் பதிலாக, உள்நாட்டுக் காரணம் கற்பித்து, வாதிடும் தவறான விளக்கம். இலவங்கம் கிடைக்கக் கூடிய உண்மையான வழிமூலத்தை, இடத்தை வெளியிடாமல், இது போலும் உண்மைக் காரணத்தை மேல் நாட்டு வணிகர்களுக்குக் கொடுக்க இயலாது. செல்வச் சீமானிகளால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நறுமணப் பொருளுக்கு வழக்கமான விலையைக் காட்டிலும், அதிக விலையைக் கொடுக்கக், கிரேக்கர்களைத் தூண்டும் குறிக்கோளுக்காகவே, அப்பொருள் கிடைப்பதில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தி விட்டு, அத்தட்டுப்பாட்டிற்குப் பொய்யான, ஆனால் அதே நிலையில் நம்பத்தகுந்ததான விளக்கத்தைத் தருவதில் அரேபியர்கள் வல்லவர் என்பதை உண்மையில் நம்பலாம், மேற்கு இந்தியா அல்லது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வாணிக மையங்களுக்கு வழக்கமாக வந்து செல்லும் அரேபிய வணிகர்களுக்காக, வங்காளம், கொரமண்டலம், மலபார், வடமேற்குப் பகுதிகளைச் சார்ந்த இந்தியர்கள், பெரும் பாலான அப்பொருள்களைச் சீனாவிலிருந்தும், இந்தியா விலிருந்தும் கப்பல்களில் கொண்டு வந்திருக்க வேண்டும்” (Warmington Commerce betweeen the Roman Empire and India, Page: 192-193) கிரேக்க, இலத்தீன் மொழி எழுத்தாளர்கள், இலவங்கம் முதலாம் பொருள்களின் மூலம் குறித்து எழுதிய . குறிப்புகளை, அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதையும், கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டைச் சேர்ந்த எகித்தியர்கள், சீன, இந்திய இலவங்கத்தை ஏடன், சோமாலி கடற்கரைகளில், இந்தியக் கப்பல்களிலிருந்து பெற்றுக் கொண்டனராதலின், எகித்தியர் நம்பியது போலவும், கிரேக்க வணிகர், பிற்காலத்தே எண்ணியது போலவும், இலவங்கம் – புண்டு நாட்டின் அதிசயப் பொருள்களுள் ஒன்றாகாது . என்பதையும் இது தெளிவாக்கி விட்டது.

புண்டு நாட்டிலிருந்து எகித்துக்கு வழங்கப்பட்டனவாக, மேலே குறிப்பிடப்பட்ட கீழ்நாட்டு அரும்பொருள்களுள், எண்ணெய், தானியங்கள் ஆகியவை இடம் பெற்றிருப் பதைக் கண்டோம். அவற்றுள், எண்ணெய் பிற்பட்ட காலத்தில், இந்தியாவிலிருந்து, காலம் தவறாமல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டதாகப், பெரிபுளுசு மூலம் நாம் தெரிந்து கொண்ட நல்லெண்ணெய் ஆகும். திருநெய்யாட்டு என்பது, அரசர்களும் மதகுருக்களும் மேற்கொண்ட ஒரு விழா. நறுமணத் தைலம் காய்ச்சுவதற்கும் எண்ணெய் தேவைப் பட்டது. நறுமணத் தைலம் செய்யப்படும் தொழிற்சாலைகள், எகிப்திலும் சிரியாவிலும் இருந்தன. தானியங்கள் என்பதில் அரிசி, பெரும் சோளம், சோணை – மூடிய தினை ஆகியன பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். அட்சேபுசுட்டு (Hatshe pust) அரசியாரின் படையெடுப்பும், புண்டு நாட்டிலிருந்து கருங்காலியைக் கொண்டு வந்தது. இந்தியப் பண்டங்கள் இந்தியா விலிருந்து காலம் தவறாமல் முறையாக எடுத்துச் செல்லப் பட்ட இடம் புண்டு நாடாகவே, அரசியார், மலபார் காடுகளில் வளர்ந்த நேர்த்தி வாய்ந்த கருங்காலியைப் பெற்றுக் கொண் டதற்குப் பெரிய வாய்ப்பு இருந்தது. (Scoff’s periplus. page:153)