நாள் :

மார்கழி 21, 2053 / 05-01-2023, வியாழக்கிழமை

மாலை 5:00 மணி முதல் 9;00 மணி வரை

இடம் :

இரமதா ஓட்டல்,

எண் : 2அ, பொன்னியம்மன் கோயில் தெரு,

எழும்பூர், சென்னை – 600008

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா

இருபத்தோராம் நூற்றாண்டில் 21 படலங்களுடன் வெளியாகும் இணையில்லாப் புராணம்

இசுலாமியத் தமிழ் இலக்கியச் சோலையில் சீறாப் புராண மரபில் மலர்ந்திருக்கிறது உமர் இரலி புராணம்

முதலாவது உதய காண்டம்

முத்தமிழ் ஞானி, அல் ஆரிஃபு பில்லாஃகு சங்கைக்குரிய சமாலிய்யா அசய்யித்து கலீல் அவ்ன் அல் அசனிய்யுல் ஃகாசுமிய் மௌலானா  (சே.எசு.கே.ஏ.ஏ.எச்சு. மௌலானா) அவர்களின்  கைவண்ணத்தில் 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற இசுலாமியத் தமிழ்க் காவியம்.

அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர், இசுலாமியப் பேரரசின்  இரண்டாவது கலீபா உமர் இபுனு கத்தாப்பு இரலியல்லாஃகு அன்கு அவர்களின் அற்புத வரலாற்றின் முதற் பாகம் செந்தமிழ்ப் புராணமாக மலர்ந்திருக்கிறது.

மூன்று பெரிய காண்டங்களாக அமையப் பெற்றுள்ள இப்புராணத்தின் முதலாவது உதய காண்டம் தற்போது உலகத் தமிழ் இலக்கிய வானில் மங்காச் சுடர்விட்டு ஒளிவிடத் துவங்கியுள்ளது ,  எல்லாப் புகழும் ஏக இறைக்கே உரித்தாகட்டும்.

முதலாவது உதய காண்டம்  21 படலங்களையும் 682 பாடல்களையும் (செய்யுள்களையும்) உள்ளடக்கியது,  அனைத்துச் செய்யுள்களுக்கும்  கொண்டுகூட்டு,  பொருள்,  குறிப்பு என பூரணமான விளக்கத்துடன் வெளியாகியுள்ளது.

தலைமை

கலைமாமணி, முனைவர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மசுதான் அவர்கள்

சிறுபான்மையினர் நலன் – வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.

உயர்திரு சா.பீட்டர் அல்போன்சு

தலைவர், தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் ஆணையம்.

முனீருல் மில்லத்து பேராசிரியர் காதர் முகைதீன்

தேசியத் தலைவர், இந்திய யூனியன் முசுலிம் லீக்கு

குறிப்பு: நூல்  வெளியீட்டு விழா அழைப்பிதழ்  நூலாசிரியர் விவரங்கள் இத்துடன் தரப்பட்டுள்ளன.