தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க!
வீழ்ந்து கிடந்த தமிழர்களை எழுந்து நிற்கச் செய்தவர்!
எழுந்து நின்றவர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்!
எழுச்சி பெற்றவர்களை எதிரிகளை ஒடுக்கச் செய்தவர்!
எதிரிகளை ஒடுக்கியவர்களால் இனத்தைக் காக்கச் செய்தவர்!
அவர்தாம் தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன்!
திருவள்ளுவரின் படைமாட்சிக்கு இலக்கணமாகச் சிறந்த படைஞர்களை உருவாக்கியவர்!
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல அரசை உருவாக்கியவர்!
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் கொண்ட சிறந்த ஆட்சித் தலைவராய் விளங்கியவர்!
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய மக்களை உருவாக்கியவர்!
உலகில் அவரது இருப்பு இன்றைக்குப் புதிராக இருக்கலாம். ஆனால் உலகத்தார் உள்ளங்களில்அசையா நம்பிக்கையுடன் வீற்றிருக்கிறார்!
எத்தனை நூற்றாண்டுகள் இனி வந்தாலும் இவர்போல் தலைவரை உலகம் காண இயலாது என்னும் சிறப்புடன் வாழ்கிறார்!
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள வஞ்சகர்களால் அவர் காத்த நாடு அழிவிற்குள்ளானது. எனினும் அவர் வழிகாட்டுதலால் மீண்டு எழும்! உலகின் முதன்மைக் குடியரசாகத் தமிழ் ஈழம் மலரும்!
வீழ்ச்சியுற்ற ஈழத்தமிழர்கள் மீண்டு வர மீண்டும் வருக!
தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழர்களை மீண்டும் தலைநிமிரச்செய்த தலைமகனே வாழ்க!
பன்னூறு ஆண்டுகள் பார்புகழ வாழ்க!
தமிழும் தமிழரும் தலைமைபெறத் தன்னிகரில்லாத் தலைவனே வாழ்வாங்கு வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல
கார்த்திகை 10, 2050 / 26.11.2019
ஐயா! மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். மிகச் சிறப்பான வாழ்த்து! அதுவும் முதல் வரிகள் செம்மை!