முகிலனும் திருடர்களும்

       காலை நேரம். பச்சை பசேலென்ற புற்களும் சில்லென்ற காற்றும் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தன. அம்மாவும் அப்பாவும் காலைச் சந்தைக்குத் தயாராகினர்.

      “சுமதி, சீக்கிரம் வா!” என்று அவரின் கணவர் அழைத்தார். “ம்ம்ம்…. வரேங்க,” என்றார் அவர். அம்மா முகிலனைத் திரும்பிப் பார்த்தார்.

      முகிலனின் அம்மாகதவைப் பூட்டி வை. நாங்கள் வரும்வரை கதவைத் திறக்காதே.” எனக் கூறியவாறே அவரும் அப்பாவும் வீட்டை விட்டுச் சென்றனர்.

      “டொக்!! டொக்!! அலோ…. அலோ…. டொக்!! டொக்!!,” எனக் கதவை  வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டது. ‘ஒருவேளை அண்டை வீட்டாராக இருப்பாரோ….’ என்று முகிலன் யோசித்தான். உடனே கதவைத் திறந்தான். வெளியே இரு வசீகர ஆடவர்கள் சிரித்த முகத்துடன் கையில் பரிசுடன் நின்றனர்.

      “வணக்கம், இது திரு அழகரின் வீடுதானே?,” என்று ஓர் ஆடவர் கேட்டார். “ஆமாம் ஐயா. என்ன விசயமாக அவரைப் பார்க்க வேண்டும்?,” என்று கேட்டான். அந்த ஆடவர்களில் ஒருவர்வாழ்த்துகள், தம்பி உன் அப்பா ஒரு போட்டியில் வென்றுள்ளார்,” என்று பதிலளித்தார்.

      முகிலன்சந்தேகமில்லை இவர்கள் திருடர்கள் தான்,’ என்று நினைத்தான். னென்றால் முகிலனின் அப்பா எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ள மாட்டார். உடனேசற்றுப் பொறுங்கள்,” என்று கூறி வீட்டின் உள்ளே சென்றான். பிறகு காவல் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டான்.

      “அசதியாக உள்ளீர்கள், சற்று உள்ளே வாருங்கள்,” என்று உள்ளே அழைத்தான். உடனே அந்த ஆடவர்களில் ஒருவர் அவனைப் பிடித்துக் கொண்டார். முகிலனோஎன்னை விட்டு விடுங்கள்,” என்று கதறினான். அவர்கள் முகிலனை கட்டிவிட்டு வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களையும் அள்ள ஆரம்பித்தனர்.

திடீரென்று…..

      காவல் அதிகாரி அவர்களைப் பிடித்தனர். பிறகு, முகிலனின் பெற்றோரும் வந்தனர். அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

   “பரவாயில்லை மாஉங்க பையன்தான் எங்களுக்குத் தகவல் தெரிவித்து….,” என்று திருடர்களைப் பிடித்தவாறே சென்றார் காவல் அதிகாரி. அவர் சென்றவுடனே முகிலனின் கண்களில் ஒரு கம்பீரம் தெரிந்தது.

 ஆக்கம்

சுப எழிலரசி முத்துக்குமார்
ஆண்டு 5, மகா கணேச வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி , சித்தியாவான்